Friday, October 2

News

சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’

சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’

News
'ஷம்பாலா' வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு... சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான 'கரிகாலா' மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 'கரிகாலா' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ...

தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டிக் கொடுத்த தனுஷ்!

News
தாய் சத்யா பள்ளியில் தனது சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டிக் கொடுத்து நெகிழ்ச்சி! *தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக நடிகர் தனுஷ் செய்த பெருஞ்செயல் ; ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சி தருணம்! *எல்கேஜி முதல் படித்த பள்ளியை மறக்காத நடிகர் தனுஷ் ; மூன்று தள கான்கிரீட் கட்டிடத்தைத் கட்டிக்கொடுத்து அசத்தல்!* *"தனுஷின் இந்த உதவி நம்மை நெகிழ வைக்கிறது ;: பள்ளித்தோழன் ஒளிப்பதிவாளர் குமரன்* பெருமிதம்!சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது அதற்கு 'தனுஷ் பிளாக்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரையிலான தனது பள்ளிப் படிப்பு ம...
ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’!

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’!

News
ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்பட...
ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘நூறு சாமி’!

ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘நூறு சாமி’!

News
விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது! உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசியின் மனதைத் தொடும் குடும்ப நாடகம், தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் நிலைத்த பிணைப்பை ஆராய்கிறது தேசியம், ஆகஸ்ட் 4, 2026: இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தற்போது தமிழ் ZEE5-ல் தமிழ், ...
அனல் தெறிக்கும் சூர்யாவின் பாடலுக்கு அட்டகாசமான வரவேற்பு!

அனல் தெறிக்கும் சூர்யாவின் பாடலுக்கு அட்டகாசமான வரவேற்பு!

News
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 'தி ஒன் ரூல்' பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா! 'பட்டாம்பூச்சி', 'தி வெட்டிங் சாங்' என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழுவினர் - தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமிக்கும் சமீபத்திய பாடலாகவும் மாறி உள்ளது. கவர்ச்சியான இசை- கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளால் நிரம்பிய.. துடிப்பான- அதிக ஆற்றலுடைய பாடலாக 'தி ஒன் ரூல்' உருவாகியுள்ளது. இந்தப் பாடல் உற்சாகத்தையும்... கம்பீரத்தையும்... கச்சிதமாக படம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் - சூர்யாவை ஒரு புத்தம் புதிய சக்தி மிக்க அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. அத்துடன் உடனடியாக கூட்டத்தின் ஒட்டுமொத்த கவனத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஒரு பாட...
சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல்!

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல்!

News
சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!* இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்தின்...
இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!

இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!

News
இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி 'சிங்கம் 2' மற்றும் 'சர்தார்' போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' (Prince Pictures) நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன் அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் தொடங்குகிறது. குடும்ப விழுமியங்கள், மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு மற்றும் ஊக்கமளிக்கும் வீரம் ஆகியவற்றை திரையில் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய படத்தின் மூலம், நடிகர் கார்த்தியும் இயக்குநர் மோகன் ராஜாவும் முதன்முறையாக இணைகிறார்கள். இந்த கூட்டணி மூலம் 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் மீண்டும் ஒரு தரமான படைப்பை தயாரிக்க முன்வந்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், அனைவர...
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் இசை வெளியீட்டு விழா! சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   - ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத...
நடிகர் கிருஷ்ணாவின்  ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் கிருஷ்ணாவின் ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
  நடிகர் கிருஷ்ணாவின் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் - மர்டர் இன் டவுன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைகளையும் ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற நடிகரான கிருஷ்ணா குலசேகரனுக்கு, அவரது 25வது படம் ஒரு ஈர்க்கக்கூடிய புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. அதிகாரப்பூர்வமாக 'மர்டர் இன் டவுன்' (Murder in Town) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மைல்கல் திட்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சினிமா ஆர்வலர்கள் மற்றும் திரையுலக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் வழங்கும் 'மர்...
அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்!

அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்!

News
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்: உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில், நட்புகள்கூட வெறும் நினைவுகளாக மட்டுமே மாறிவிடுகின்றன. ஆனால், சிலர் மட்டும் உண்மையான வெற்றி என்பது உச்சத்தை அடைவது மட்டுமல்ல, தங்களுடன் பயணித்தவர்களையும் அந்த உயரத்திற்குக் கொண்டு செல்வதுதான் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அல்லு அர்ஜுன். சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'AA23' திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அந்தப் படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதன் பின்னணியில் இருந்த ஒரு விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. மைத்ர...