Saturday, October 25

News

தெலுங்கில் வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின்  ‘புரியாத புதிர்’.

தெலுங்கில் வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’.

News, Slider
விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்க, புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே சதிஷ் குமார் வெளி இடும். 'புரியாத புதிர்' படத்தின் தெலுங்கு வெளியீடு மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீப காலமாக தமிழ் படங்கள் பல தெலுங்கில் வெளி இடப்படுகிறது. நல்லகதை அம்சமும், ஜனரஞ்சகமான காட்சி அமைப்பும், தமிழ் நடிகர்களின் உன்னத நடிப்பும், மொழி சார்ந்த எல்லையை தாண்டி நமது நடிகர்களின் புகழை விஸ்தரிக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியும் , 'புரியாத புதிர்' படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பும் இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் வர்த்தக ரீதியாக பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டி உள்ளது. பிரபல பட நிறுவனமான 'டி வி சினி CREATIONS படநிறுவனம் 'புரியாத புதிர்' படத்தை தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளி இட இருக்கிறது.தமிழில் வெளி வரும் அதே நாளில் தெல...
‘தேவி’ வெற்றி விழா

‘தேவி’ வெற்றி விழா

News
ஒரு கலைஞனுக்கு தேவைப்படுவது பணம் மட்டுமே இல்லை. அத்துடன் தங்களின் உழைப்புக்கு ஏற்ற கௌரவத்தை தான் அவர்கள் விரும்புகிறார்கள்... ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால், அந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்களின் பெயர் பதித்த கேடயங்களை வழங்குவது முன்பு வழக்கமாக இருந்து வந்தது.... கால போக்கில் அத்தகைய செயல் வெகுவாக மறைந்து போனது. "தேவி" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் அந்த கலாச்சாரத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். வெற்றிக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், அவர்களின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் பதித்த கேடயங்களை வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். பிரபு, நாசர், ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டா...
சமயோசித அறிவின் பலத்தை சொல்ல வரும் படம் ’பலசாலி’

சமயோசித அறிவின் பலத்தை சொல்ல வரும் படம் ’பலசாலி’

News
வைஷாலி பிக்சர்ஸ் வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி” ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம் தான் ’பலசாலி’. பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் ”பலசாலி”. ”சூது கவ்வும்” பாணியிலான ”பிளாக் ஹியூமர்” படமாக உருவாகிறது ”பலசாலி”. பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் ”பலசாலி” படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்...
Kavan Movie Press Release

Kavan Movie Press Release

News
கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்து வழங்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment)நிறுவனம், தனி ஒருவன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தங்களது பதினெட்டாவது தயாரிப்பாக வெளிக்கொண்டுவரும் புதிய படத்தின் இயக்குநர் திரு கே.வி. ஆனந்த். இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார். நேயர்கள் பெருமளவில் தங்கள் யூகங்களைக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனமும், இயக்குநர் கே.வி. ஆனந்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். இப்போது படத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. ‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இ...

வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா…!

News
வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா...! "மாதிரி ராக்கெட் " செய்து அசத்திய பள்ளி . சென்னை கொளப்பாக்கம் வேலம்மாள் போதி பள்ளியில் முதலாம் ஆண்டு விஞ்ஞான் 2016 என்னும் தலைப்பில் அறிவியல் போட்டிகள் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இதில் 80 க்குள் மேற்ப்பட்ட பள்ளிகளிலுருந்து 1500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 17 அறிவியல் போட்டிகள் 6 நிலைகளில் வகுப்பு ரீதியாக மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் தாங்கள் தயாரித்த அறிவியல் மாதிரிகளை கொண்டு வந்து விளக்கினார்கள். விழாவில் சிறப்பு அம்சமாக மாதிரி ராக்கெட் தயார் செய்து அதை இயக்கிக்காட்டியது மாணவர்களுக்கு பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. இது போன்ற அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை பள்ளி மாணவர்களுக்கு இந்த வயதிலேயே காண்பிப்பதும், அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க ஊக்கம் தர...
தமிழ், தெலுங்கு,ஹிந்தி.. மொழிகளில் பேச தயாராகும் “புலிமுருகன்”

தமிழ், தெலுங்கு,ஹிந்தி.. மொழிகளில் பேச தயாராகும் “புலிமுருகன்”

News
தமிழ், தெலுங்கு,ஹிந்தி.. மொழிகளில் பேச தயாராகும் “புலிமுருகன்” மோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் “புலி முருகன்” வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படத்தின் மற்ற மொழி உரிமையை பெற பலர் போட்டியிட இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார். பாகுபலி படத்திற்கு பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. புலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை ரமேஷ்.பி.பிள்ள...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை

News
“ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… “நீலம்” நிகழ்த்திய நெகிழ்ச்சியும், ஏற்றிய நெருப்பும்! இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார், முத்தமிழ். வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப்படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப்படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட “ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… ஆகிய இரண்டு ஆவணப்படங்களும் முன்மொழிந்தன. ஓவியர் சந்துரு, இயக்குநர்கள், ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், மற்றும் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ்.வி.ஆர், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கவிஞர். உமாதேவி, எடிட்டர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மிர்ச்புர் கி...
மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!

மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!

News
இரட்டை இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! “சட்டங்களும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட நாமும் உடந்தைதான்” ; யதார்த்தம் உடைக்கும் அறிமுக இயக்குனர் சம்பத்குமார்.! மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! “அரசாங்கத்தை மட்டும் குறைகூறி பயனில்லை” ; அறிமுக இயக்குனர் பளிச் பதில்..! சினிமாவால் சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய முடியும் ; நம்பிக்கையுடன் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! முதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் தான்.. ஆனால் வெகுசிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக பாரத்தை, காலம் காலமாக தொடரும் சமூக அவலத்தை தம் முதல் படத்தின் மூலம் வெளி உலகிற்கு தெரிவித்துவிட மாட்டோமா என உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டு இருப்பார்காள்.. ...
ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண் ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்”

ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண் ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்”

News
ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண் ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் "நாகேஷ்திரையரங்கம்" திரையுலகில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்களை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் "நாகேஷ்திரையரங்கம்" எனும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கி சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் கதாநாயகனாக நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும் படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடிக்கிறார்கள். முண்டாசுப்பட்டி, ராஜாமந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த ம...
சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா

சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா

News
ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் ​​​ மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார். ’இனி படங்களை​த்​ தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ​”​புலிமுருகன்​”​. நேற்று வெளியான ​”​புலிமுருகன்​”​ இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம். ​”​ புலிமுருகன்​”​ படம் பற்றி… கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்கா...