கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்து வழங்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment)நிறுவனம், தனி ஒருவன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தங்களது பதினெட்டாவது தயாரிப்பாக வெளிக்கொண்டுவரும் புதிய படத்தின் இயக்குநர் திரு கே.வி. ஆனந்த்.
இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார். நேயர்கள் பெருமளவில் தங்கள் யூகங்களைக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனமும், இயக்குநர் கே.வி. ஆனந்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். இப்போது படத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, ‘கவண்’ என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசைவில்பொறி (catapult),கல்லெறிகருவி (sling) என்றுஇலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்.
மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமான செட்கள் அமைத்து, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, நாயகனாக பங்கேற்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரு. டி. ராஜேந்தர், வெள்ளித்திரையில் தனக்கே உரிய பிரத்தியேக முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கிறார். மடோனா செபாஸ்டின், விக்ராந்த்,பாண்டிய ராஜன், நாசர், போஸ் வெங்கட், ஆகாஷ்தீப், ஜெகன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் பங்களிக்கின்றனர்.
கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது, இதுவே முதன்முறை. இளமை ததும்பும் ஐந்து பாடல்களை வழங்குகிறார் ஹிப் ஹாப் தமிழா.அதிலும்குறிப்பாகடி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும்.
கே.வி. ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்கள் சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள்.
தொடங்கிய நாளிலிருந்து படப்பிடிப்பு, விறுவிறுவென நடந்து, நிறைவடையும் கட்டத்துக்கு வந்திருக்கிறது.நவம்பரில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கும்.
* * *
AGS PRODUCTION 18
முக்கியத்தொழில்நுட்பகலைஞர்கள்
இயக்கம் K V ஆனந்த்
இசை ஹிப்ஹாப்தமிழா
ஒளிப்பதிவு அபிநந்தன்ராமானுஜம்
கதை, திரைக்கதை K V ஆனந்த், சுபா , கபிலன்வைரமுத்து
வசனம் சுபா, கபிலன்வைரமுத்து
படத்தொகுப்பு ஆண்டனி
கலை DRK கிரண்
நடனம் பிருந்தா , ஷோபி , பாபாபாஸ்கர்
சண்டைப்பயிற்சி திலிப்சுப்புராயன்
ஆடைவடிவமைப்பு சமீராசனீஷ்
ஒப்பனை A R அப்துல்
புகைப்படம் மோதிலால்
மக்கள்தொடர்பு நிகில்முருகன்
தயரிப்புமேலாளர்கள் S R லோகநாதன், D சரவணக்குமார்
நிர்வாகத்தயாரிப்பாளர் S M வெங்கட்மாணிக்கம்
தயாரிப்பாளர்கள் கல்பாத்தி S அகோரம்
கல்பாத்தி S கணேஷ்
கல்பாத்தி S சுரெஷ்