Wednesday, October 28

News

‘ஸ்ரீ தேவி’ திரையரங்கின் மேலாளர் மற்றும் ஆபரேட்டர் கைது ….

News
 ஜீவா - காஜல் அகர்வால் நடிப்பில், ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்  - எல்ரெட்  குமார்   தயாரிப்பில்,  டீகே  இயக்கிய கவலை வேண்டாம் திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அன்று வெளியானது.....வெளியான சிறிது  நேரத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற   கவலை வேண்டாம் திரைப்படம், அடுத்த நாளே Tamil Rockers.com, Tamil Yogi.com  போன்ற    இணையத்தளங்களில் கசிந்தது, ஒட்டுமொத்த  படக்குழுவினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.... இது எங்கிருந்து ஆரம்பமானது என்பதை தற்போது துணிச்சலோடு கண்டிபிடித்தது மட்டுமின்றி, சம்பந்த பட்ட திரையரங்கின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்...     "எங்கள் கவலை வேண்டாம் படத்தை நாங்கள் 'கியூப் சினிமா நெட்வர்க்கில் பதிவு செய்து இருக்கிறோம்....;அவர்களின் உதவியால் தான் இதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது....அரக்கோணத்தில் இருக்கும் 'ஸ்ரீ த...

கருண் நாயரை பாராட்டும் சென்னை 28 அணியினர்…..

News
500 - 1000 பிரச்சனைகள் மத்தியில் வெளியாகி, அமோக வெற்றி பெற்ற திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28 - II.... இந்த அணியினர் தற்போது, சென்னையில் நடைபெற்ற  கிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவிற்காக  மூன்று சதங்களை அடித்து அசத்தி இருக்கும் கருண் நாயரை வாழ்த்தி இருக்கின்றனர். "சென்னை - 303'  கதாநாயகன் கருண் நாயருக்கு , எங்கள் சென்னை 28 அணியின் சார்பில்  வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.....தன்னுடைய வாழ்க்கையில்  பல சவால்களையும் , போட்டிகளையும்  சந்தித்து, தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார் கருண் நாயர்......எங்களின் சென்னை 28 II படத்தின் வெற்றியும் ஏறக்குறைய  அவரை போல தான் இருக்கின்றது..... மூன்றாவது சதத்தை கருண் நாயர் அடிக்கும் பொழுது, சென்னை சேப்பாக் விளையாட்டு அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.....அதே போல் விநியோகஸ்தர் மத்தியிலும், ...
இலவசமாக மரக்கன்று கொடுக்கும்  நடிகர் ராகவா லாரன்ஸ்

இலவசமாக மரக்கன்று கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

News
தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்க குடிநீர் இல்லமால் அணைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருகிறார்கள். இந்த வேளையில் சென்னையில் வர்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேல் மரங்கள் சாய்ந்துவிட்டன. அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதனால் லாரன்ஸ் தனது ட்ரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார். தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப் படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற  எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப் படும்  ...
‘புரியாத புதி’ ரும் – பொங்கல் திருநாளும்

‘புரியாத புதி’ ரும் – பொங்கல் திருநாளும்

News
தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து, நட்சத்திர நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு, வருகின்ற 2017 ஆம் ஆண்டும் வெற்றிகரமான  ஆண்டாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.....இவர் நடிப்பில், ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் - ஜே சதிஷ் குமார் தயாரித்து இருக்கும் 'புரியாத புதிர்' திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.  விஜய் சேதுபதி - ஜே சதீஷ் குமார் கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் இந்த 'புரியாத புதிர்' என்பது குறிப்பிடத்தக்கது. "விரைவில் பிறக்க இருக்கின்ற தைத்த்திருநாளை வரவேற்க ஒட்டுமொத்த தமிழகமும் உற்சாகத்துடன் தயாராகி கொண்டிருக்கும் இந்த தருவாயில்,  தரமான திரைப்படங்கள் மூலம் அவர்களின் மகழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, திரையுலகின் முக்கிய கடமை.....விஜய் சேதுபதிக்கும், தமிழக ரசிகர்களுக்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா உறவு இருக்கிறது...
‘ஒத்தைக்கு ஒத்த’ மோத தயாராக இருக்கிறார்  அதர்வா

‘ஒத்தைக்கு ஒத்த’ மோத தயாராக இருக்கிறார் அதர்வா

News
'ஒத்தைக்கு ஒத்த' என்ற சொல் பலருக்கு தெரியாமல் இருந்தாலும், கல்லூரி மாணவர்களிடையே  அது  மிகவும் பிரபலம்....கல்லூரி நாட்களில் மாணவர்கள் மத்தியில்  சண்டைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று ......அதற்கு தீர்வாக  அவர்கள் கருதுவது , இந்த 'ஒத்தைக்கு ஒத்த' சண்டை  முறையை தான்...அத்தகைய வலுவான கதையம்சத்தில் தற்போது உருவாக இருப்பது தான் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். இயக்குநர் பா ரஞ்சித்திடம் 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் இந்த   'ஒத்தைக்கு ஒத்த' படத்தை,  'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.... இவர்கள் தயாரிப்பில் ஏற்கனவே உருவான 'அரண்மனை திரைப்படம்', மாபெரும் வெற்றியை தழுவியது குறிப்பிடத்தக்கது.  பழம்பெரும் நடிகர் தியாகராஜன்  மற்றும் அஞ்சாதே புகழ் நரேன் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ...
நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது

நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது

News
  எவர்கிரீன் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் M.விஜயகாந்த் தயாரிக்கும் படம் ‘நாங்க வேலைக்கு போயிட்டா... ஊரை யார் பாத்துக்கிறது’. ஆதி நடித்த 'அய்யனார்' படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இந்தப்படத்தை இயக்குவதுடன் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.. கன்னடத்திலும் கூட ஒரு படத்தை இயக்கியுள்ள இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.. இன்றைய தேதியில் ஒரு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவேண்டும் என்றால் அதற்கு முதல் தேவை நல்ல டைட்டில் தான்.. அது புதுமுகங்களோ, அல்லது ஓரளவு தெரிந்த முகங்களோ என்றாலும் கூட டைட்டில் கவனம் ஈர்க்க வேண்டும். அப்படி உருவாக இருக்கும் படம் தான் ‘நாங்க வேலைக்கு போயிட்டா.. ஊரை யார் பாத்துக்கிறது’.. ரவுடியிசம் தலைவிரித்தாடும் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவன், கல்விதான் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் என்கிற நம்பிக்கையுடன் கல்லூரியில் படித்து கோல்டு மெடல் வாங்குகிறான்.. ஆனால்...
இம்மாதம் 23 ம் தேதி வெளியாகிறது கத்திசண்டை

இம்மாதம் 23 ம் தேதி வெளியாகிறது கத்திசண்டை

News
                                 ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம்    “கத்திசண்டை  “ இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடிக்கிறார்கள்.                                                                                                                         ஒளிப்பதிவு    -   ரிச்சர்ட் எம்.நாதன்  இசை   -    ஹிப் ஹாப் தமிழா  பாடல்கள்   -   நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா             ...
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’

உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’

News
யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில், காதல் கலந்த பொழுது போக்கு  திரைப்படமாக  உருவாகி இருக்கும் 'யாக்கை', வருகின்ற உழவர் திருநாளன்று வெளியாக இருக்கின்றது. 'பிரிம் பிச்சர்ஸ்' சார்பில் முத்துக்குமரன் தயாரித்து, குழந்தை வேலப்பன் இயக்கி  இருக்கும் 'யாக்கை' திரைப்படத்தில் கிருஷ்ணா - சுவாதி ரெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "நம்முடைய விவசாயத்தையும், அதற்கு மூல காரணமாக இருக்கும் விவசாயிகளையும் கௌரவிக்கும் திருநாள் - பொங்கல்....அப்படிப்பட்ட உன்னதமான நாளில் எங்கள் யாக்கை திரைப்படத்தை வெளியிடுவதில், நாங்கள் பெருமை கொள்கிறோம்.... அதுமட்டுமின்றி முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் 'பிரிம் பிச்சர்ஸ்  நிறுவனத்திற்கு இது சிறப்பும் கூட.....ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான யாக்கை பட பாடல்கள் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற, எங...
எல்லாருக்கும் தெரியும், ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள்! நடிகர் பிரஜின்

எல்லாருக்கும் தெரியும், ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள்! நடிகர் பிரஜின்

News
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவற வில்லை. பார்த்தசினிமா ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும் விமர்சன,பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் பிரஜின். ஆனால் இந்த ஒரு தகுதிக்கு அவர் கொடுத்த விலை அதிகம். அனுபவித்த வலிகளும் அதிகம். பிரஜின் பிரபல தொலைக் காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். அலுவலக வேலைபோல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தவர். ஆனாலும் அங்கேயே தங்கி விடவில்லை .பறவைக்கு இறக்கை இருப்பது பறப்பதற்கே தவிர நடப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொண்டார். தன் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்து கொண்டார். திரைவாய்ப்புகள் தேடத் தொடங்கினார்.இன்று ஒருபடத்தின் முழு நாயகனாக  நிற்கிறார்...! இனி அவரே பேசட்டும். "என் முதல் ...

‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்

News
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்வது என்பது, அனைத்து அறிமுக இயக்குநர்களுக்கும் ஒரு சவாலான காரியம் .... அந்த வகையில், தற்போது 'U'  சான்றிதழை பெற்று, ரசிகர்களின் பாராட்டுகளை பெற தயாராக இருக்கின்றார்  அஷ்வின் கக்கமனு - சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'திரி' திரைப்படத்தின் இயக்குநர் அசோக் அமிர்தராஜ் .   'சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் ஏ.கே. பாலமுருகன் - ஆர். பி. பாலகோபி தயாரித்து இருக்கும்  'திரி' படத்தை ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருகின்றனர்..... திரி திரைப்படம் தந்தை - மகன் உறவை மையமாக கொண்டு நகரும். "தணிக்கை குழுவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, அவர்களிடம் இருந்து U  சான்றிதழை பெறுவது அவ்வளவு எளிதல்ல.... அதுவும் என்னை போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு, அது மிக பெரிய சவால்....தற...