கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்திருக்கிறார் கே பாக்கியராஜ்
திரைக்கதை என்றால் பாக்கியராஜ்....பாக்கியராஜ் என்றால் திரைக்கதை.... இது தான் தமிழ் திரையுலகினர் மத்தியில் இருக்கும் கருத்து....தமிழ் மட்டுமின்றி ஹிந்தி திரையுலகினை சார்ந்த அமிதாப் பச்சனும், அணில் கபூரும் இதையே தான் சொல்லகிறார்கள்.....அந்த அளவிற்கு 'திரை பாக்கியம்' பாக்கியராஜின் புகழ் பரவி இருக்கிறது.... அத்தகைய உன்னதமான படைப்பாளிக்கு இருந்த, இருக்கின்ற உதவியாளர்களை அவ்வளவு எளிதில் விரல் விட்டு எண்ணி விட முடியாது....அவர்களுள் ஒருவர் தான் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். தன்னுடைய குருநாதர் கே பாக்கியராஜை கௌரவிக்கும் வண்ணமாக, 'சாதனை சல்யூட்' விழாவை கடந்த 04.12.16 அன்று சென்னையில் உள்ள 'இமேஜ் உள் அரங்கத்தில்' நடத்தினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் .
பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற 'சாதனை சல்யூட் விழாவில் இயக்குநர் பாரதி ராஜா, கே பாக்கிய ராஜ் - பூர்ணிமா பாக்கியராஜ், எஸ் ஏ சந்திரசேகர்...




