Wednesday, October 28

News

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

News
  ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குனர் - சீனு ராமசாமி ( தர்மதுரை ) சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி ( தர்மதுரை ) சிறந்த நடிகை - தமன்னா ( தர்மதுரை ) சிறந்த ஒளிப்பதிவு - ஷாஜி ( தர்மதுரை ) இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்....
பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா

பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா

News
இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாயா. அடிப்படையில் உடற்பயிற்சி வல்லுனரான (Gymnast) இவர், இந்திய அளவில் 6ம் இடத்தை பிடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். மேலும் பாடகி, மேடை கலைஞர், க்ளௌன் (Clown) மருத்துவர், சிலம்பாட்ட கலைஞர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார். மாயா தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்திலும், இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் “மகளிர் மட்டும்” படத்திலும், சந்தானம் நடிப்பில் உருவாகும் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது திரையுலக பயணம் உள்ளிட்டவற்றை பற்றி மாயா குறிப்பிடுகையில், “நான் திரைத்துறையில் நடிக்க வந்ததும், பாடகியாக உறுமாறியதும் எதிர்பாராமல் நடந்த இன...
சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது

சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது

News
விழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சீலிங் ஏற்பாடுகள் செய்யபடும். 2. கட்டிடம் கட்ட உடனடி ஆவனமும், பணம் திரட்டும் முயற்சியும் வேகமாக மேற்கொள்ளப்படும். 3. டப்பிங் சீரியல் தடுப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் போன்றவைகளுக்கு உடனடியாக ஆவணம் செய்யப்படும்....
Tollywood Thunders wins the finals of the Celebrity Badminton League at Malaysia.

Tollywood Thunders wins the finals of the Celebrity Badminton League at Malaysia.

News
Malaysia, Kuala Lumpur, November 12th 2016: India’s First Celebrity Badminton League (CBL) - Season 1 finals was played at Malaysia today in Stadium Badminton Cheras, KL. CBL Season 1 had Four Celebrity teams representing Tollywood- Tollywood Thunders, Mollywood- Kerala Royals, Kollywood- Chennai Rockers and Sandalwood- Karnataka Alps. All the team owners along with the film stars participated with great enthusiasm to the delight of the audience. Tollywood Thunders beat Kerala Royals to emerge as the victors in a tightly contested final. Team Karnataka Alps was placed third while Team Chennai Rockers took the last position. The team positions before the finals were based on points accumulated from the initial league matches at Kochi and Hyderabad were as follows: Kerala Royals were ranked...
‘கழுகு பார்வை’ யோடு களம் இறங்கி இருக்கிறது ‘பெஞ்ச் பிலிக்ஸ்’

‘கழுகு பார்வை’ யோடு களம் இறங்கி இருக்கிறது ‘பெஞ்ச் பிலிக்ஸ்’

News, Videos
https://www.youtube.com/watch?v=-G3A7X__Mns&feature=youtu.be மழை மேகங்களுக்கு மேலே பறக்க கூடிய ஒரே பறவை இனம் 'கழுகு'. மனிதனின் கண் பார்வையை விட ஐந்து மடங்கு அதிகமான கூர்மையான பார்வையை உடையது 'கழுகு'. அந்த கூர்மையான பார்வையை கொண்டு சமூதாயத்தில் நடைபெறுகின்ற குற்றங்களை எப்படி தடுக்கலாம் என்பதை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், 'பென்ச் பிலிக்ஸ்' வழங்கி இருக்கும் 'கழுகு பார்வை' குறும்படம். 'நாம் என்ன காரியம் செய்தாலும், நம்மை யாரோ கண்காணித்து கொண்டே இருப்பார்கள் என்பதை மறந்து விட கூடாது...' என்பது தான் இந்த 'கழுகு பார்வை' குறும்படத்தின் ஒரு வரி கதை. பள்ளி மாணவன் ஒருவன் பணத்திற்காக சில கும்பல்களால் கடத்தப்படுகிறான்.... எப்படியாவது அவன் தந்தையிடம் இருந்து பணத்தை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டுகின்றது அந்த கும்பல்.... ஆனால் அவர்களுக்கே தெரியாமல், அவர்களை சுற்றி...
‘சைத்தான்’ னை கட்டுப்படுத்தும் மற்றொரு ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

‘சைத்தான்’ னை கட்டுப்படுத்தும் மற்றொரு ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

News
'மம்மோன்' (பேராசை) , 'அசிமோடெஸ்' (காமம்), 'லேவியதன்' (பொறாமை) ஆகிய மூன்றும் தான், துஷ்ட தேவதைகளில் மிக வலிமையான சைத்தான்களாக கருதப்படுகிறது....ஆனால் அந்த மூன்றுக்கும் வழிகாட்டியாக திகழ்வது லூசிபர் (கர்வம்) என்னும் சைத்தான்.... தற்போது அவை அனைத்தும் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி பிறக்க இருக்கின்ற புதிய 'சைத்தான்' (விஜய் ஆண்டனி) னை நினைத்து பயத்தில் தத்தளித்து கொண்டு இருக்கின்றது. அந்த சைத்தானை கட்டுப்படுத்தும் ஒரே சக்தி, மற்றொரு 'சைத்தான்' னாகிய இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு மட்டும் தான் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. சென்னை லயோலா கல்லூரியில் இயக்கம் சார்ந்த படிப்பை முடித்து விட்டு, தேசிய விருது பெற்ற 'ஆடுகளம்' திரைப்படத்தில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.... நெசவாளர்கள், மீனவர்கள், கொடைக்கானல் மலையில் இருந்து கு...
கிரிக்கெட் ஆட்டத்தில் ‘யூ – டர்ன்’ எடுத்துள்ளனர் ‘சென்னை 28 – II’ அணியினர்

கிரிக்கெட் ஆட்டத்தில் ‘யூ – டர்ன்’ எடுத்துள்ளனர் ‘சென்னை 28 – II’ அணியினர்

News
ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, 'யூ' சான்றிதழ் தான். அந்த வகையில், தங்களின் 'சென்னை 28 - II' படத்திற்காக 'யூ' சான்றிதழை தணிக்கை குழுவிடம் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய அணியினரும் பெற்று இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. "எங்கள் சென்னை 28 - II திரைப்படம் வெற்றிகரமாக யூ சான்றிதழை பெற்று இருப்பது, எங்கள் ஒட்டுமொத்த அணியினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.... நட்பையும், கிரிக்கெட்டையும் ஒன்றிணைத்து நாங்கள் அடித்த சிக்ஸர் தான் இந்த 'யூ' சான்றிதழ்....'வெற்றி' என்னும் கோப்பையை விரைவில் எங்களின் தொடர் சிக்ஸர் மழையால் நாங்கள் கைப்பற்றுவோம்...." என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு....
சதுரங்கவேட்டை 2

சதுரங்கவேட்டை 2

News
மனோபாலாவின் பிச்சர்ஹவுஸ் பெருமையுடன்வழங்கும் சதுரங்கவேட்டை 2 நடிகர் - நடிகைகள் · அரவிந்த்சாமி · த்ரிஷா · ராதாரவி · நாசர் · பிரகாஷ்ராஜ் · பூர்ணா · மனோபாலா · மயில்சாமி · RNR மனோகர் · யோகிபாபு · ஸ்ரீமன் · குமாரவேல் தொழில்நுட்பகலைஞர்கள் · இசை : அஸ்வமித்ரா · பாடல்கள் : அறிவுமதி / யுகபாரதி · ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ் · படத்தொகுப்பு : SP ராஜாசேதுபதி · கலை : NNமகேந்திரன் · ஒப்பனை : கோதண்டம் · உடைகள்வடிவமைப்பு : வாசுகிபாஸ்கர் · உடைகள...
‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது…

‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது…

News
ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.... 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும் அதிகமாக படங்கள் வெளியாகி உள்ளன... ஆனால் அவற்றுள் வெகு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய ஆற்றல் இருந்திருக்கின்றது... அந்த வகையில், தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தயாரிப்பு துறையில் களம் இறங்கி இருக்கும் 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் நிறுவனர் ஜி டில்லிபாபு, தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற 'உறுமீன்' திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்த ஜி டில்லி பாபு, தற்போது ஆதி - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் 'மரகத நாணயம்' படத்தை தயாரித்து வருகிறார்.... அதனை தொடர்ந்து, தங்களுடைய '...
‘நட்சத்திரங்களுடன் ஓர் நேரலை’ – ‘சட்னி சாட்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்துகிறது கல்ச்சர் மிஷினின் ‘புட் சட்னி’

‘நட்சத்திரங்களுடன் ஓர் நேரலை’ – ‘சட்னி சாட்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்துகிறது கல்ச்சர் மிஷினின் ‘புட் சட்னி’

News
தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலாக உருவாகி இருக்கும் 'புட் சட்னியின்' ரசிகர்கள் எண்ணிக்கை, பல லட்சங்களை தாண்டி போய் கொண்டிருக்கிறது. அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணமாக தற்போது 'சட்னி சாட்' என்னும் புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது 'புட் சட்னி'. 'அயன்' படப்புகழ் ஜெகன் சிறப்பு விருந்தினராக பங்குபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது தொகுப்பு இன்று மாலை வெளியாகிறது. 'பேஸ்புக்', 'டிவிட்டர்' போன்ற சமூக வலைத்தளங்கள் தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமாக இருந்தாலும், அந்த சமூக வலைத்தளங்கள் உருவாக ஆரம்ப புள்ளியாக இன்றளவும் இருப்பது, நம் நாட்டில் இருக்கும் டீ கடைகள் தான். எந்த செய்தியாக இருந்தாலும், டீ கடைகளை தாண்டி தான் மற்றவர்களின் காதுக்கு போகும். அரசியல் முதல் விளையாட்டு வரை உள்ள அனைத்து செய்திகளும் விவாதிக்க படும் முதல் பேஸ்புக், டீ கடை. 'சட்னி சாட்' நிகழ்ச்சியி...