Sunday, October 4

News

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

News
‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் ! இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால், வெங்கயோ குரல்களில் உருவாகியுள்ள இந்த பாடல், இளமையும் உற்சாகமும் கலந்த காதல் பாடலாக அமைந்துள்ளது. துள்ளலான இசை, கவர்ச்சிகரமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்-நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மாடர்ன் கல்யாணத்தின் அனைத்து ‘அட்ர...
பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகும் புஷ்கர் காயத்ரியின் ‘வதந்தி சீசன் 2’

பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகும் புஷ்கர் காயத்ரியின் ‘வதந்தி சீசன் 2’

News
பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு. பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும்  விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ...
தமிழக அரசின் ‘உண்மை சரிபார்ப்புப் பிரிவு’ இனி ‘தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு’ என்று பெயர் மாற்றம்!

தமிழக அரசின் ‘உண்மை சரிபார்ப்புப் பிரிவு’ இனி ‘தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு’ என்று பெயர் மாற்றம்!

News
தமிழ்நாடு பஅரசின் 'உண்மை சரிபார்ப்புப் பிரிவு' (Fact Check Unit) இனி 'தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு' (Information Integrity Desk - IID) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவின் பொறுப்பாளராக, 'ஆன்லைன் தளபதி ரசிகர் மன்ற'த்தின் (Online Thalapathy Fans Club) நிறுவனரும், சமூக ஊடகங்களில் 'குரு தலைவா' (Guru Thalaiva) என்று பிரபலமாக அறியப்படுபவருமான குரு நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் (DIPR) கீழ் செயல்படும் சமூக ஊடகப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக, TVK-வின் தகவல் தொழில்நுட்பப் (IT) பிரிவு ஒருங்கிணைப்பாளர் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்....
திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா!

திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா!

News
திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா! பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை!! *ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலர் கலந்து கொள்ளும் ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்!* மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளது. பிலிம்சேம்பர் வளாகத்தில் அமைந்துள்ள மீட்டிங் ஹாலில் மேற்கண்ட சங்கங்கள...
கார்த்தி நடித்த ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

கார்த்தி நடித்த ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

News
கார்த்தி நடிப்பில் 'சர்தார் 2' டீசர் வெளியீடு! கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சர்தார் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'சர்தார்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இப்படத்தின் டீசர், படத்தின் பிரம்மாண்டம், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை ...
அறிவே ஆயுதம் என்பதை ஆணித்தரமாக சொல்ல வரும் ‘பீப்’ திரைப்படம்!

அறிவே ஆயுதம் என்பதை ஆணித்தரமாக சொல்ல வரும் ‘பீப்’ திரைப்படம்!

News
  ரொம்பவே அரிதாக வெளியாகும் ‘ஹை கான்செப்ட்’டில் க்ரைம் டிராமாவாக தயாராகியுள்ள ‘பீப்’ *ஹை கான்செப்ட்’டில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய முயற்சி : விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இல.சண்முகசுந்தரின் ‘பீப்’* எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரசாந்த் விஹாரி இசையமைக்கிறார். இவர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கேர்ள் பிரண்ட்’ படத்திற்கு இசையமைத்தவர். கன்னட திரை உலகை சேர்ந்த, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரதீப் பத்மகுமார் ஒளி...
சாதிக்கப் புறப்பட்டவர்களின் கூட்டணியின் உருவான  ‘ஆலி’ திரைப்படம் ‘ !

சாதிக்கப் புறப்பட்டவர்களின் கூட்டணியின் உருவான ‘ஆலி’ திரைப்படம் ‘ !

News
ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி புதியவர்களின் கூட்டணியில் 'ஆலி' முற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஆலி'.. மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் 'ஆலி'.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது. ஆலி – கதைச் சுருக்கம் தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை - பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் "ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி கடந்து நடைபெறுகிறது என்பதே படத்...
கவித்துவமான தலைப்பில் உருவாகும் காதல் கதை!

கவித்துவமான தலைப்பில் உருவாகும் காதல் கதை!

News
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது ! டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது. ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மாற்...
மருத்துவ உலகின் மறுபக்கத்தை பதிவு செய்யும் ‘செய் செய்யாதே’

மருத்துவ உலகின் மறுபக்கத்தை பதிவு செய்யும் ‘செய் செய்யாதே’

News
செய் செய்யாதே தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ உலகின் மறுபக்கத்தை மனிதநேய பார்வையில் பதிவு செய்து மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் புதிய திரைப்படமாக உருவாகியுள்ளது செய் செய்யாதே. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான H. ராஜா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது திரைப்படத்திற்கு தனித்துவமான கவனத்தை ஈர்த்துள்ளது. கதையின் முக்கியமான கட்டத்தில் இடம்பெறும் அவரது கதாபாத்திரம் படத்தின் கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் (HARINI SUBBU CINE CREATIONS ) தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் ...
‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியீடு !

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியீடு !

News
சசிகுமார் நடிப்பில் பிரைம் வீடியோவின் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியீடு ! ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். CHENNAI, India—July 31, 2026 — ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பி...