Wednesday, October 28

News

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு!

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு!

News
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound ...
‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

News
நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ ! வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.. சமீப காலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புத் தாரகை என்று ரசிகர்களால் பாராட்டப்படும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையை தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி...
‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

News
நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் - செவன் ஸ...
ஏழு மொழிகளில் இந்தியாவின் கலாச்சார வேர்களை பிரதிபலவழங்கும் ZEE5

ஏழு மொழிகளில் இந்தியாவின் கலாச்சார வேர்களை பிரதிபலவழங்கும் ZEE5

News
ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5 இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில், இந்தியாவின் துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மனதை கவரும் கதைகளை ஒரே தளத்தில் வழங்கும் ZEE5 பொழுதுபோக்கு உலகம் என்பது டிரெண்டிங்கை பின்பற்றுவதால் வளர்வதில்லை; புதிய டிரெண்டிங்கை உருவாக்குவதன் மூலமே வளர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் (Content Slate) பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும்...
கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா!

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா!

News
கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா! அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது.., முதலில் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் அவருடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்று இந்தப் படத்தின் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தருணம் மிகவும் மகி...
ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

News
ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்! ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று  பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினரோடு  திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி ரசிகர்களிடையே  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான உணர்வுகளை மையம...
இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’!

இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’!

News
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'தட்டுவண்டி' சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்தை, 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற 'பில்டர் கோல்டு' திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். தனது முந்தைய படைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களத்துடன் 'தட்டுவண்டி' திரைப்படத்தை ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார். படத்தின் அன...
ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘தி இந்தியா ஸ்டோரி’!

ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘தி இந்தியா ஸ்டோரி’!

News
பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது! *பூச்சிக்கொல்லி விவசாயத்தின் கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தும் “தி இந்தியா ஸ்டோரி ” ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!* *உண்மைக்காக போராடும் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே – “தி இந்தியா ஸ்டோரி” டிரெய்லர் வெளியீடு !* காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் பரவலான தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அன்றாடம் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் இந்தப் படம...
தொழில் முனைவோராக தனது புதிய பயணத்தைத் தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்!

தொழில் முனைவோராக தனது புதிய பயணத்தைத் தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்!

News
பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்! நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 'காலா', 'விஸ்வாசம்', 'அரண்மனை 3' உள்ளிட்ட திரைப்படங்களிலும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்பு கலவையில் மாற்றங்களைச் செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாரிப்பை உருவாக்கியுள்ளார். பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படு...
எழுத்தாளர்கள் சங்க (SWAN) புதிய்நிர்வாக குழுவிற்கு TFAPA- வாழ்த்து!

எழுத்தாளர்கள் சங்க (SWAN) புதிய்நிர்வாக குழுவிற்கு TFAPA- வாழ்த்து!

News
20 ஜூலை 2026* *தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) தேர்தல்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவிற்கு TFAPA-வின் வாழ்த்து.* தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA), தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) 2026–2029 காலத்திற்காக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. *புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு எங்கள் வாழ்த்துகள்:* • தலைவர்: இயக்குநர் திரு. சேரன் • செயலாளர்: எழுத்தாளர் - இயக்குநர் திரு. 'பட்டுக்கோட்டை' பிரபாகர் • பொருளாளர்: இயக்குநர் திரு. ஆர். சுந்தரராஜன் • துணைத் தலைவர்கள்: இயக்குநர் திரு. ப. சமுத்திரக்கனி மற்றும் பாடலாசிரியர் திரு. சினேகன் • இணைச் செயலாளர்கள்: இயக்குநர்கள் திரு. ரவி மரியா, திரு. பாஸ்கர் சக்தி, திரு. வி. பிர...