 
            பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’
            அருண் விஜய் நடிப்பில், மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும்  'குற்றம் 23' திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருக்கின்றது. அறிவழகன் இயக்கத்தில்  ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பை பெற்று இருக்கும் இந்த திரைப்படத்தை, 'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கிறார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் குற்றம் 23 படம், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பலரை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
"நல்லதொரு நாளன்று திரைப்படத்தை வெளியிடுவது தான் எல்லா தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருக்கும்....அந்த வகையில், தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும்  எனக்கு, ஒட்டுமொத்...        
        
    



