Saturday, November 21

Uncategorized

‘சுனில் ஜெயின்’ மீது கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராஜராஜன் மோசடி புகார்!

‘சுனில் ஜெயின்’ மீது கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராஜராஜன் மோசடி புகார்!

Uncategorized
திரைப்பட தயாரிப்பாளர்களின் அப்பாவித் தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பினாமி சுரபி மோகன் என்பவர் மூலம், பல திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை வலுக்கட்டாயமாக அபகரித்து, ஏமாற்றி வந்த சுனில் ஜெயின் மீதும், சுரபி மோகன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 'வா டீல்', 'காவியன்', 'ஐங்கரன்', '1945' ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் கமிஷனர் அலுவலகத்தில் '1945' தயாரிப்பாளர் ராஜராஜன் சுனில் ஜெயின் மீது மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி புகார் மனு கொடுத்துள்ளார். மற்ற தயாரிப்பாளர்களும் , கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளனர். பல புகார்கள் குவிந்ததால் சுனில் ஜெயின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

மாயநதி – விமர்சனம்

Uncategorized
அம்மா இல்லை என்றாலும் தன் அன்பு மகள் வெண்பாவுக்கு தானே தாயாகவும் இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார் அப்பா நரேன். பள்ளியில் முதலமகள் சாப்பிடும்போது அவளது பாடத்தை அப்பா் மாணவியாக இருக்கும் வெண்பாவுக்கு மருத்துராவதுதான் லட்சியம். காரணம் பிரசவத்தின்போதே அவரது அம்மா இறந்து விடுகிறார். தன்னைப்போல் எந்தக் குழந்தையும் பிறக்கும்போதே அம்மா இல்லாத குழந்தையாக பிறக்கக்கூடாது என்பதற்காகவே தான் மருத்துவராக வேண்டும் என்றும் தன்னைப்போல் எந்தக் குழந்தையும் அம்மா இல்லாத குழந்தையாக பிறக்கக்கூடாது என்பதற்காகவே மருத்துவராக சேவை செய்யப்போவதாகக் தன் ஆசிரியையிடம் கூறுகிறார் வெண்பா. அதைப்போலவே தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்துகிறார். அவர் சாப்பிடும்போதுகூட அப்பா அவரது பாடத்தை சத்தமாகப் படிக்க, அதை மனதில் பதிந்து கொள்ளும் அளவுக்கு படிப்பில் தீவிரமாக இருக்கிறார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் வெண்பாவிடம் ...

‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்துக்காக பாடிய இளையராஜா!

Uncategorized
இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையில் கிரவுன் பிக்சர்ஸ் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தில் இசைஞானி இளையராஜா பாடிய ‘சொக்குரேன் சொக்குரேன்’ என்ற முதல் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். அருகில் இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் எஸ்.எம்.இப்ராஹிம், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, இயக்குனர் சிவபாவலன், பாடலாசிரியர் அருண்பாரதி, ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் ஆகியோர் உள்ளனர்....