Friday, October 23

மாயநதி – விமர்சனம்

Loading

அம்மா இல்லை என்றாலும் தன் அன்பு மகள் வெண்பாவுக்கு தானே தாயாகவும் இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார் அப்பா நரேன். பள்ளியில் முதலமகள் சாப்பிடும்போது அவளது பாடத்தை அப்பா் மாணவியாக இருக்கும் வெண்பாவுக்கு மருத்துராவதுதான் லட்சியம். காரணம் பிரசவத்தின்போதே அவரது அம்மா இறந்து விடுகிறார். தன்னைப்போல் எந்தக் குழந்தையும் பிறக்கும்போதே அம்மா இல்லாத குழந்தையாக பிறக்கக்கூடாது என்பதற்காகவே தான் மருத்துவராக வேண்டும் என்றும் தன்னைப்போல் எந்தக் குழந்தையும் அம்மா இல்லாத குழந்தையாக பிறக்கக்கூடாது என்பதற்காகவே மருத்துவராக சேவை செய்யப்போவதாகக் தன் ஆசிரியையிடம் கூறுகிறார் வெண்பா.
அதைப்போலவே தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்துகிறார். அவர் சாப்பிடும்போதுகூட அப்பா அவரது பாடத்தை சத்தமாகப் படிக்க, அதை மனதில் பதிந்து கொள்ளும் அளவுக்கு படிப்பில் தீவிரமாக இருக்கிறார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் வெண்பாவிடம் தன் காதலைச் சொல்ல, அதை ஏற்க மறுக்கிறார் வெண்பா. இதனால் ஆத்திரமடையும் அவன் வெண்பா மீது ஆசிட் வீசுகிறான். வெண்பாவை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் அபி சரவணன், ஆசிட் வெண்பாமீது படாமல் தடுத்து காப்பாற்றுகிறார். முதலில் அபி சரவணனுடன் சாதாரணமாகப் பழகும் வெண்பா பின்னர் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இதுவரை நேர்கோட்டில் அழகான கவிதையைப் போல் சென்று கொண்டிருந்த கதை இதற்குப் பிறகு சற்றே தடம் மாறத் தொடங்குகிறது.
ஏற்றிருப்பது பள்ளி மாணவி வேடம் என்றாலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வெண்பா. அழகுப் பதுமைகளாக வந்து போகும் கதாநாயகிகளையே தொடர்ந்து பல படங்கிளில் பார்த்து சலித்த நமக்கு ஆழமான கதையில் அருமையாக நடித்திருக்கும் வெண்பாவை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
தன் ஆட்டோவின் பின்பகுதியில் எழுதியிருக்கும் வாசகங்களை அவ்வப்போது மாற்றி எழுதி வைக்கும் அபி சரவணனும் தன் பாத்திரத்தை உணர்ந்து நன்கு நடித்திருக்கிறார். நரேனைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பா வேடம் என்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதுவும் மாய நதி படத்தில் வெண்பாவின் அப்பா வேடம் அவருக்காகவே எழுதப்பட்டதுபோல் அவ்வளவு அச்சு அசலாக பொருந்துகிறார்.
பவதாரணியின் இசை பரவாயில்லை ரகம்தான்.
படத்தின் ரசிக்கத் தக்க அம்சங்களில் முதலிடம் பிடிப்பது ஸ்ரீனிவாஸ்
தேவாம்சத்தின் ஒளிப்பதிவுதான். மாயவரத்தின் அழகையெல்லாம் தன் கேமராவில்
அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் மனிதர்.
தான் என்ன சொன்னாலும் தன்அப்பா கேட்பார் என்று சொல்லும் வெண்பா அபி சரவணனை காதலிப்பதைச் சொல்லி திருமணம் செய்து கொள்ள அவரது அனுமதியை ஏன் கேட்கவில்லை. அப்பா அனுமதிப்பாரா மாட்டாரா என்றுகூட தெரிந்துகொள்ளாமல் காதலன் சொன்னவுடன் இப்படியா பள்ளிக்கு அரை நாள் விடுமுறை போட்டுவிட்டுப்போய் திருமணம் செய்து கொள்வார்…
படத்தின் பிற்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மறக்க முடியாத படமாக அமைந்திருக்கும் மாயநதி.
ஆயினும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படத்தைத் தந்ததற்காகவே இயக்குநர் அசோக் தியாகராஜனைப் பாராட்டலாம்.