Saturday, November 21

Uncategorized

இறுதி கட்ட படப்பிடிப்பில் “அக்னி சிறகுகள்”! 

இறுதி கட்ட படப்பிடிப்பில் “அக்னி சிறகுகள்”! 

Uncategorized
அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது “அக்னி சிறகுகள்”. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான பொறிபறக்கும்  ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து  கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும்  படமாக்கப்பட்டு வருகிறது. உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின்...
“தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை” – நடிகை ரியா

“தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை” – நடிகை ரியா

Uncategorized
ஒரு ஹாரர் படமாக உருவாகி இருக்கிறது 'மேகி' என்கிற மரகதவல்லி . இப்படத்தில் கதாநாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா .அவர் ' மேகி' படத்தின் அனுபவங்களைக் கூறுகிறார். " எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன் . சிறு வயதிலேயே மாடலிங் சினிமா என்று தோன்றி நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு .ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன் .அவர் இதற்கு உடன்படவில்லை. எப்படியாவது என்னைத் திசை மாற்ற வேண்டுமென்று "நீ ஒரு டிகிரி முடித்து விட்டு வா. அப்புறம் பார்க்கலாம்" என்றார் .அதன்படி நான் பி.எஸ்.சி முடித்து மீண்டும் இதைக் கேட்ட போது "இன்னொரு மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு வா "என்றார் .ஆனால் நான் விடவில்லை. "படித்துக்கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை" என்று கூறினேன். நான் சினிமாவில் ஒரு பக்கம் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன் .ஒருபக்கம் படித்...
விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டி!

விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டி!

Uncategorized
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டிசம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் புதிய அணி உருவாகி தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த புது அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் அவர்களும், "மன்னன் பிலிம்ஸ்" மன்னன் அவர்கள் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்த அறிவிப்பு கூட்டத்தில் கிருஷ்ணன், E.மணி, நாராயணன், சாய், அரவிந்தன், பன்னீர்செல்வம் மற்றும் பல விநியோகிஸ்தர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் நடக்கவுள்ள இந்த சங்கத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்....
இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்!

இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்!

Uncategorized
நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். "எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்" என்று எளிமையாக முடித்துக் கொண்டார். இசை அமைப்பாளர் தென்மா பேசியபோது, "இந்த மேடையில் பேசுவதற்காக ஐந்து வருடம் பிராக்டிஸ் பண்ணேன். இன்னைக்குத் தான் நடந்தது. காரணம் பா.இரஞ்சித் சார் தான். இந்தப் படத்தோட ஜர்னில நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லணும். தயாரிப்பாளாரா பா.ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி. இயக்குநர் அதியன் கூட க்ளோசா பயணிக்க முடிந்தது. அவர் பொலட்டிக்கலா யோசிக்கக் கூடியவர். அதனால் எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் பேரன்பின் காதலர். கிஷோர்...
ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020!

ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020!

Uncategorized
2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியயை நடந்த உள்ளனர். திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்கிவிக்கும் விதமாக முதன்முறை திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் சிறந்த கலைஞர்களை அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர். இதற்காக zee தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளனர் .இந்த தேர்வு குழுவில் சுஹாசினி மணி ரத்னம் , கெளதம் வாசுதேவ் மேனன் ,பரத் பாலா , பரத்வாஜ் ரங்கன், கரு பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளன...