![]()
தனுஷ் நடித்து வெளிவந்த மாரி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மாரி 2 என்ற பெயரில் தனுஷ் தன் சொந்தப்பட நிறுவனமான வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறர்.
டிசம்பர் 21 முதல் உலகெங்கும் திரைக்கு வரும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரெளடி பேபி என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவிருக்கிறது.
சாய் பல்லவி, டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ,வினோத், அஜய் கோஷ், வித்யா பிரதீப்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பாலாஜி மோகன் எழுதி இயக்கியருக்கிறார்.
ஆடை வடிவமைப்பு பொறுப்பை வாசுகி பாஸ்கர் ஏற்க, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பை கவனிக்கிறார். எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின் ஆகியோரது தயாரிப்பு மேற்பார்வையில் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கிறார் எஸ்.வினோத் குமார்.
சண்டைக் காட்சிகளை சில்வா மாஸ்டர் அமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு ரியாஸ் கே.அஹமது.
கிறிஸ்மஸ் விருந்தாக ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ள கொள்ள வருகிறது மாரி 2.

