தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டிக் கொடுத்த தனுஷ்!
தாய் சத்யா பள்ளியில் தனது சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டிக் கொடுத்து நெகிழ்ச்சி!
*தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக நடிகர் தனுஷ் செய்த பெருஞ்செயல் ; ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சி தருணம்!
*எல்கேஜி முதல் படித்த பள்ளியை மறக்காத நடிகர் தனுஷ் ; மூன்று தள கான்கிரீட் கட்டிடத்தைத் கட்டிக்கொடுத்து அசத்தல்!*
*"தனுஷின் இந்த உதவி நம்மை நெகிழ வைக்கிறது ;: பள்ளித்தோழன் ஒளிப்பதிவாளர் குமரன்*
பெருமிதம்!சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது அதற்கு 'தனுஷ் பிளாக்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரையிலான தனது பள்ளிப் படிப்பு ம...








