Wednesday, April 30

விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர்கள்!

Loading

சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.  இவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி யை சேர்ந்த ஜெய முருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் விவசாயி பிரகாஷ்.

கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர்கள் விஜய் சேதுபதி யின் சங்க தமிழன் திரைபடம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பேனர்,போஸ்டர் ,பாலபிஷேகம் போன்றவற்றை தவிர்த்து மாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து விதை பந்துகள் மரச்செடிகள் என வழங்க திட்டமிட்டனர்.

ஆனால் விவசாயீ ஒருவர் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் கேட்டு வருவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் விவசாயி பிரகாஷை தொடர்பு கொண்டனர். பிறகு விவசாயி பிரகாஷை நேரில் சந்தித்து விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் விவசாயி பிரகாஷின் சொந்த ஊரான சிவபுரத்திற்கு நேரில் சென்று நெல் பயிர் நாற்று நட்டு உழவு செய்து விவசாயீ பிரகாஷுக்கு உதவி செய்தனர்.

மேலும் விவசாயி பிரகாஷுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாய் பணம் வழங்கினர். அதே போல டிராக்டர் மூலம் காய்ந்து கிடந்த நிலத்தை உழவு செய்தனர்.பிறகு முறையாக பூஜை செய்து விவசாயிக்கு மரியாதை செலுத்தி ஏர் உழுது நாற்று நடத் தொடங்கினர்.
மேலும் அங்கு வந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.அதே போல விவசாயிக்கு நெல் பயிரிடத் தேவையான உரம் ,உட்பட அனைத்திற்கும் விஜய் சேதுபதி ரசிகர்களே ஏற்பாடு செய்தனர்.இதனால் விவசாயி பிரகாஷ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் .தன்னுடைய சொந்த நிலத்தில் நெல் பயிரிட வட்டிக்கு பணம் கேட்டு அலைந்த நேரத்தில் தனது விவசாய நிலத்திற்க்கு ஒரு ரூபாய் கூட செலவின்றி களத்தில் இறங்கி விவசாயம் செய்து கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நண்றி தெரிவித்தார்.

மக்கள் செல்வன் ரசிகன் என்ற பெயரில் அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாய புரட்சியில் ஈடுபட்டு வருவது அனைவரிடத்திலுன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.