Friday, October 2

Tag: VijaySethupathy

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !

News
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் ! பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம் ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்!! பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும், புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில், விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார். இப்படம் ஒரு மிகப்பெரிய பான் இந்தியா திருவிழாவாக இருக்கும். இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து, பூரி கனெக்ட்ஸ் பட நிறுவத்தின் கீழ், பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். ...
விஜய் சேதுபதி நடிக்கும் ‘VJS 51’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘VJS 51’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியீடு! 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'VJS 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கி...
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ‘மஹாராஜா’!

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ‘மஹாராஜா’!

News
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான 'மஹாராஜா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா! பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் 'குரங்கு பொம்மை' நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக 'மஹாராஜா' உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் முதலாவதாக பேசிய இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத், " விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஐம்பதாவது படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது. 'குரங்கு பொம்மை' படத்திலேயே நிதிலன் அட்டகாசம் செய்திருப்பார். இந்த படமும் சிறப்பாக வந்திருக்கிறது. இரண்டு மெலோடி பாடல்கள் படத்தில் உண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், " படத்தின் கதை மிக அருமையாக வந்திருக்கிறது. நான் செய்த அனைத்து டார்ச்சர்கள...
மாணவர்களுக்கு ஓராண்டு கட்டணத்தைச் செலுத்தும் ‘ஆஹா’வும், ‘மாமனிதன்’ விஜய் சேதுபதியும்!

மாணவர்களுக்கு ஓராண்டு கட்டணத்தைச் செலுத்தும் ‘ஆஹா’வும், ‘மாமனிதன்’ விஜய் சேதுபதியும்!

News
    மாணவர்களுக்கு ஓராண்டு கட்டணத்தைச் செலுத்தும் ‘ஆஹா’வும், ‘மாமனிதன்’ விஜய் சேதுபதியும்! தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெறவேண்டும் என்பது மையமாக இடம்பெற்றிருக்கும். இதனை ஆஹா டிஜிட்டல் குழுமமும் மனமுவந்து முன்மொழிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக்கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கியிருக்கிறார். ஆ...
விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!

விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!

News
அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்த...
மக்கள்செல்வன் VijaySethupathy ரசிகர்கள் உதவி!

மக்கள்செல்வன் VijaySethupathy ரசிகர்கள் உதவி!

News
மக்கள்செல்வன் VijaySethu ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் தென்சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் வீதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு மற்றும் (கபா சுரம் கசாயம்) வழங்கப்பட்டது !! "உடலால் தனித்திருப்போம் உள்ளத்தால் இணைந்திருப்போம்"
லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக்

லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக்

News
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன்  சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு கமர்சியல் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஆனந்த விகடன்  வழங்கும் விகடன் அவார்ட்ஸ்   மேடையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. .. உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது.  இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.  இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டதும்...
விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர்கள்!

விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர்கள்!

News
சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.  இவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி யை சேர்ந்த ஜெய முருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் விவசாயி பிரகாஷ். கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர்கள் விஜய் சேதுபதி யின் சங்க தமிழன் திரைபடம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பேனர்,போஸ்டர் ,பாலபிஷேகம் போன்றவற்றை தவிர்த்து மாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து விதை பந்துகள் மரச்செடிகள் என வழங்க திட்டமிட்டனர். ஆனால் விவசாயீ ஒருவர் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் கேட்டு வருவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் விவசாயி பிரகாஷை தொடர்பு கொண்டனர். பிறகு விவசாயி பிர...
இளையராஜாவுடன் பிரச்னையா? – சீனு ராமசாமி விளக்கம்!

இளையராஜாவுடன் பிரச்னையா? – சீனு ராமசாமி விளக்கம்!

News
என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம், நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன் "திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்" என்றேன் 'அது சரி' என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு "உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல" அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான் 1000 படங்களுக்கு மேல் இசை அமை...