Friday, November 28

ஃப்ரைடே _ விமர்சனம்

Loading

ஃப்ரைடே விமர்சனம்

கேங்ஸ்டர் கதையை நேர்க்கோட்டில் சொல்லாமல்,நான் லீனியர் முறையில் வித்தியாசமாக சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ஃப்ரைடே.

கூலிக்காக அடிதடி மற்றும் கொலைகள் செய்யும் கூட்டம் ஒன்றின் அடியாட்களில் ஒருவராக அனீஸ் மாசிலாமணி வேலை பார்க்கிறார்.

தன்னைப்போலவே தன் தம்பியும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, சமீபத்தில் திருமணமான தன் தம்பிக்கு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தன் அண்ணனுக்கு தெரியாமல், ஒரு கொலை செய்வதற்கு சென்றவர்களுடன் உடன் சென்ற அனீஸ் மாசிலாமணியின் தம்பி எதிர்பாராத விதமாக கே பி ஒய் தீனாவால் சுடப்படுகிறார்.

கே பி ஒய் தீனாவால் ஏன் அவர் சுடப்படுகிறார்?

தம்பி கொல்லப்பட்டதை அறிந்த அனீஸ் மாசிலாமணி அதன் பிறகு என்ன செய்கிறார் என்பதுதான் பிரைடே படத்தின் கதை.

அடிதடி குத்துவெட்டு என்று இருந்தாலும் தன் குடும்பத்தாரிடம் பாசத்தை பொழிவதும், தம்பி தன்னைப் போலவே ஆகிவிடக் கூடாது என்று முனைப்பு காட்டுவதிலும் சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார் அனீஸ் மாசிலாமணி.

சில நடிகர்களுக்கு போலீஸ் அதிகாரி வேடம் எப்படி கனகச்சிதமாக பொருந்துமோ அதுபோல் மைம் கோபிக்கு அடியாட்களை வைத்து வேலை வாங்கும் அரசியல்வாதி பாத்திரம் அப்படியே கனகச்சிதமாக பொருந்தும்.

படத்திலும் அமர்க்களமாக அந்த வேடத்தை செய்திருக்கிறார் மைம் கோபி.

மற்றும் கே பி ஒய் தீனா, சிந்து குமரேசன், ராம்ஸ் ராமச்சந்திரன் போன்றவர்கள் சிறிய வேடங்களில் வந்தாலும் நினைவில் நிற்கும்படி நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

கதை நடக்கும் கடற்கரை பகுதிகளை மிக அழகாக படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், இரவு நடப்பது போன்ற காட்சிகளையும் வெகு சிறப்பாக படமாக்கி இருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

படத்தின் விறுவிறுப்புக்கு பிரவீன் எம் படத்தொகுப்பு வெகுவாகவே உதவியிருக்கிறது.

டுமேவின் பின்னணி இசை திரில்லிங் படத்திற்கு தேவையான தை கொடுத்திருக்கிறது.

வழக்கமான கேங்ஸ்டர் கதையாக அல்லாமல் முடிந்தவரை சற்றே மாறுதலான திரில்லர் பாணியில் இயக்குனர் ஹரி வெங்கடேஷ் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

திரில்லர் பட ரசிகர்களை வெகுவாக கவரும் இந்த ஃப்ரைடே. மதிப்பெண் 3.5/5