![]()
மாஸ்க்_ விமர்சனம்
கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்று சுருக்கமாக ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். டார்க் ஹியூமர் பாணியிலான இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவை காட்சிகள், மிகப் பிரமாதமாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே “நான் கெட்டவன்தான்…ஆனால் எச்சை இல்லை…” என்று சொல்லும் கவின் நடித்த வேலு கதாபாத்திரத்தை இயக்குநர் செதுக்கியிருப்பதே பார்க்க புதிதாககவும் வித்தியாசமாகவும் உள்ளது.
அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) எதிர் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பெண்களை வைத்து பாலியல் தொழிலை நடத்தி வரும் பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறான்.
பூமி நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைத்து பணம் பட்டுவாடா பண்ணுவதற்கு தயாராக இருக்கும் நிலையில், எம்.ஆர். ராதா மாஸ்க் அணிந்த ஒரு கூட்டம் பணத்தை கொள்ளை அடிக்கிறது.
டிடெக்டிவ் ஏஜென்ட்டாக கோல்மால் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வரும் வேலு எப்படி இந்த வலையில் சிக்குகிறான். பின்னர் அதில் இருந்து அவனால் மீள முடிந்ததா இல்லையா என்பதே இந்த மாஸ்க் இன் கதை.
நகைச்சுவையும் வில்லத்தனமும் கலந்த வேடத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார் கவின்.
சமூக சேவகி என்ற போர்வையில் பாலியல் தொழிலுக்கு சேவை செய்யும் வேடத்தில் ஆண்ட்ரியா அசத்தி இருக்கிறார்.
லேத்து பட்டறை நடத்தி வரும் கவின் மாமனாரான சார்லி படத்தின் பின்பகுதியில் கதைக்கு திருப்புமுனை தரும் மற்றொரு முகத்தை காட்டுவதால் கவனம் ஈர்க்கிறார்.
ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக மலர்ந்திருக்கும் மாஸ் திரைப்படம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.


