ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே ‘இருளன்’.
இப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் தான் என்ற வலிமையானக் கருத்தை இப்படம் தாங்கி நிற்கும்.
இப்படத்தைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது :-
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கே உரிய துடிப்புடன் செயலாற்றியிருக்கிறோம்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.
இப்படத்தின் நாயகர்களாக ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை யு.சூர்யா பிரபு எழுதி இயக்க, யு.ஹர்ஷ வர்தனா இசையமைத்து ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர் பாலாஜி மோகன் இன்று வெளியிட்டார்.