விஷால் சுவர் ஏறி குதித்தது உண்மையா?

0

 344 total views,  1 views today


கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் விஷால் மீது கோபாலபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் அவதூறான குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார். அதுதொடர்பான உண்மையை கண்டறிந்து தெளிவுபடுத்த வேண்டும் என கோரி, சென்னை காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள திரு.வாராகி அவர்கள் மனு அளிக்க உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது ;

உயர்திரு,
காவல்துறை ஆணையர்,
சென்னை

ஐயா,

சமீப நாட்களாக மீ டூ என்கிற பிரச்சாரம் மூலம் பெண்கள் பலரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி வருவது தொடர்கதையாக இருக்கிறது. அதேபோல தற்போது நடிகர் விஷால் மீதும் கோபாலபுரத்தை சேர்ந்த விஷ்வதர்ஷினி என்கிற பெண் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அதாவது நடிகர் விஷால் கோபாலபுரத்தில் குடியிருக்கும் காயத்ரி என்பவரது அபார்ட்மென்ட்டுக்கு நள்ளிரவு 2 மணி அளவில் முன்வாசல் வழியாக வந்ததாகவும், அதன்பின் அதிகாலை சுமார் 4 மணியளவில் சுவர் ஏறி குதித்து சென்றதாகவும் தனது முகநூல் பக்கத்தில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

விஷால் குறித்து அவதூறு பரப்பிய அந்தப்பெண் தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அபார்ட்மென்ட்டில் காயத்ரி என்கிற பெண்மணி வசித்த அந்த குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர் தன்வசம் இருந்த அதுகுறித்த சிசிடிவி காட்சி ஆதாரங்களை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவரிடம் ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அதை உடனடியாக காவல்துறை வசம் ஒப்படைத்து அதுகுறித்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கலாம். அதைவிடுத்து தனிப்பட்ட முறையில் இப்படி சமூக வலைத்தளம் வாயிலாக ஒரு பிரபலம் மீது அவதூறு பரப்புவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. விஷாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவே தெரிகிறது.

நடிகர் விஷால், அவர் சார்ந்த சமுதாயத்தின் முக்கிய தலைவராக இருப்பவர். அதுமட்டுமல்ல தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அப்படிப்பட்ட நபர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது, அதை இப்போதே தெளிவுபடுத்தாவிட்டால், வரும் நாட்களில் அதுவே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

இதற்கு முன் தமிழ் திரையுலகில் பல ஜாம்பவான்கள் பொறுப்பு வகித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என முக்கிய பொறுப்புகளில் விஷால் இருப்பதால் அவருடைய மற்றும் அந்த பதவிகளுடைய கண்ணியமும் மாண்பும் காக்கப்படவேண்டும் என்பதே எங்களை போன்ற தயாரிப்பாளர் சங்க, மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்களின் கோரிக்கை.

எனவே தாங்கள் விஷாலின் மீதான இந்த அவதூறு புகார் மற்றும் அதுகுறித்த ஆதாரங்கள் இருப்பதாக சொலப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என பணிவன்புடன்.. இதற்காக தாங்கள், திரு.விஷால், அவர் மீது குற்றச்சாட்டு கூறிய பெண்மணி மற்றும் விஷாலுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பெண் ஆகிய மூவரிடமும் விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Share.

Comments are closed.