ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’

0

 596 total views,  1 views today

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ரசிகர்களை உடனடியாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக காமெடி படமான இது அனைவரையும் வசீகரித்துள்ளது. கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்த படம், தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது.
 
STRன் ஒரு வெற்றி படத்தின் புகழ்பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் மகத். இந்த படத்தில் STRன் தீவிரமான ரசிகராகவும்  நடித்திருக்கிறார் மகத்.
 
இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று மாலை ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ என்ற தலைப்பை மகத் ராகவேந்திரா வெளியிட்டார்.
 
இயக்குனர் பிரபு ராம் சி கூறும்போது, “மகத் ஒரு வட சென்னை இளைஞராக, STRன் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்தது, அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன். STR ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தலைப்பு வைக்கப்பட்டதா என்பது குறித்து அவர் பதிலளிக்கும்போது, இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்” என்றார்.
 
தரண் இசையமைத்துள்ள இந்த படத்தில் என்னியன் ஜெ ஹாரீஸ் (ஒளிப்பதிவு), பிரவின் பாஸ்கர் (எடிட்டர்), கிஷோர் (கலை), லோகன் (பாடல்கள்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்), சாண்டி (நடனம்) மற்றும்  கண்ணன் (SFX) ஆகியோரும் பணிபுரிகிறார்கள்.
 
வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

Share.

Comments are closed.