சங்கத் தமிழன் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் அறிக்கை!

0

 211 total views,  1 views today

அனைவருக்கும் வணக்கம்

கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம்

இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் திரு.சுந்தர் , திருமதி .பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்

இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் திரு.அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய திரு. JSK, திரு.தேணாண்டாள் முரளி , திரு H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்

இதுவரை இல்லாத அளவு இந்த படத்தை மிகப்பிரமாண்டமாக ரிலிஸ் செய்யலாம் என்று போராடிக்கொண்டிருக்கும் போதே , படத்திற்கு நெல்லையில் தடை , லிப்ராவிற்கு டெப்ஸிட் , இடையே திடீரென்று எங்கள் நாயகன் திரு. விஜய்சேதுபதி அவர்களின் என்றும் தீரா பிரச்சனை என்ற இண்டர்வியூ இவற்றிற்கிடையே எங்களுடைய ஒரே நோக்கம் படத்தை வெளிகொண்டுவருவது மட்டுமே

ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள் , கேலிகள் , அவமானங்கள் , புறக்கணிப்புகள் ஆனால் எது நடந்தாலும் இந்த லிப்ரா புரொடக்சன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை

ஒருத்தங்க மேல ஈசியா குற்றச்சாட்டை சொல்லிவிட்டு கேலிசெய்துவிட்டு போய்விடலாம் , ஆனா அவர்களுக்கான பதிலை காலம் நின்றுசொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது எங்களுக்கு, எங்களுடைய ஒரே நோக்கம் எடுத்த வேலையை ஒழுங்காக செய்து அதை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வது மட்டுமே அதை எப்போதும் லிப்ரா செய்துகொண்டுதான் இருக்கும்

நன்றி
இவன்

LIBRAProduction

Share.

Comments are closed.

CLOSE
CLOSE