330 total views, 1 views today
47-வது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ள 200-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிறந்த 20 திரைப்படங்களை அந்நாட்டின் முன்னணி பத்திரிகை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில் இயக்குநர் ராம் இயக்கத்தில் P L தேனப்பன் தயாரிப்பில் மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கும் “பேரன்பு” மற்றும் J சதீஸ் குமார் தயாரிப்பில் ஆண்ட்ரியா ஜெரிமியா நடித்த “தரமணி” திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (World Premiere) 27-ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே (Pathe) திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து 28-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது காட்சியும் பார்வையார்களால் அரங்கு நிறைந்தது. மெகா ஸ்டார் மம்மூட்டி மற்றும் தங்கமீன்கள் சாதனாவின் தத்ரூபமான நடிப்பையும் இப்படைப்பை அழகாக சித்தரித்த இயக்குநர் ராமையும் வெகுவாக பாராட்டினர்.
பேரன்பு திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மேலும் இரண்டு காட்சிகள் திரையிடப்படவுள்ளது. 30-ம் தேதி சிறப்பு காட்சியாக ஊடக மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த பார்வையாளர்களுக்கும், 31-ம் தேதி பொது பார்வையாளர்களுக்கும் திரையிடப்படவுள்ளது.
இயக்குநர் ராம், தயாரிப்பாளர் P L தேனப்பன் மற்றும் தங்கமீன்கள் சாதனா இத்திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டனர்.