47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநரின் முதல் இரண்டு படைப்புகள் மட்டுமே போட்டிப் பிரிவில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலையில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) திரைப்படம் பார்வையாளர்கள் விருதுக்கு மட்டுமே போட்டியிட்டது.
பார்வையாளர்களின் வாக்கின் அடிப்படையில் தரக்கூடிய பார்வையாளர்கள் விருதில் 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்டன. அதில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) திரைப்படம் 20-வது இடத்தை தக்க வைத்தது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வாய்ப்பளித்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும் வாக்களித்த திரைப்பட விழாவின் பார்வையாளர்களுக்கும் எங்களது நன்றிகள்.
மேலும் House on Fire பிரிவில் தமிழ் திரைப்படங்களைக் கொண்டு சேர்த்த ஒலப் முல்லர் அவர்களுக்கும் ஸ்டீபன் அவர்களுக்கும் மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக் குழுவினருக்கும் எங்களது நன்றிகள்.
தமிழ்நாடு மற்றும் கேரள ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களது நன்றிகள்.
பிரியங்களுடன்,
ராம்
P L தேனப்பன்
ஸ்ரீ ராஜ லக்ஷ்மி பிலிம்ஸ்
Link: https://iffr.com/en/audience-award-2018