![]()
செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் _ விமர்சனம்
நடிகர்கள் & நடிகைகள்
*விஜய ராகவேந்திரா* @ சீதாராம்
*கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே* @ செபஸ்டியன்
*உஷா பண்டாரி* @ சீதாராமன் தங்கை
எழுத்து & இயக்கம் : *தேவிபிரசாத் ஷெட்டி*
வழங்குபவர் : *பவன் வடேயருடன் இணைந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்”*
ஒளிப்பதிவாளர்: *ஹேமந்த்*
இசை : *நவனீத் ஷாம்*
படத்தொகுப்பு: *ஷாங்க் நாராயணா*
கலை : *பவானி ஷங்கர் அனேகல்*
மக்கள் தொடர்பு: *ஸ்ரீ வெங்கடேஷ்*
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’.
இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடகாவின் மலைப்பகுதியில் நடக்கும் கொடூரமான கொலைகளையும், அதை புலன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் சீதாராமின் அணுகு முறைகளையும் சுவைபட விவரிக்கிறது இந்தத் திரைப்படம்.
கொலைகளை புலன் விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக விஜய ராகவேந்திரா நிறைவாக நடித்திருக்கிறார்.
அவரது உயரமும் உடல் மொழியும் இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது.
ஒன் மேன் ஆர்மி போல் முழு படத்தையும் தன் தோள்மீது சுமந்து நின்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் விஜயராகவேந்திரா.
இவரது சகோதரியாக வரும் உஷா பண்டாரி மற்றும் செபாஸ்டின் வேடத்தில் தோன்றும் கோபாலகிருஷ்ணன தேஷ் பாண்டே உள்ளிட்ட பலரும் ஏற்றிருக்கும் குணச்சித்திர வேடங்கள் கதை ஓட்டத்திற்கு வெகுவாக துணை நிற்கின்றன.
ஒரு விதத்தில் படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இரண்டுமே ஒளிப்பதிவாளர் ஹேமந்த் ஆச்சார்யா என்று சொன்னால் மிகையாகாது.
அந்த அளவுக்கு தனது நேர்த்தியான படப்பிடிப்பால் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார் இந்த ஒளிப்பதிவாளர்.
படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கும் நவனீத் ஷ்யாமின் பின்னணி இசை பார்வையாளர்களிடம் பரபரப்பைப் கூட்டுகிறது.
துவக்கத்தில் இருந்து இறுதிவரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் இயக்குனர் தேவி பிரசாத் ஷெட்டி பாராட்டுக்குரியவர்.
சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ ஒரு சர்க்கரை பொங்கல்.


