Monday, March 9

சீதா பயணம் _ விமர்சனம்

Loading

சீதா பயணம்_ விமர்சனம்

ஆக்ஷன் அவதாரத்தில் பல படங்களில் அசத்திய ஆக்சன் கிங் அர்ஜுன் அடக்கி வாசித்து கொடுத்திருக்கும் பீல் குட் மூவி சீதாப்பயணம்.

மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும் நிரஞ்சனை நாயகனாகவும் வைத்து  தயாரித்து இயக்கியிருக்கும் அர்ஜுன், படத்தின் திரைக்கதையும் அமைத்திருக்கிறார்.

சிறுவயதிலேயே அம்மாவை இழந்து அப்பா சத்யராஜ் வளர்க்கப்படும் ஐஸ்வர்யா அப்பாவை அம்மா என்று அழைத்துப் பழகி இருக்கிறார்.

புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஒருவரின் பயிற்சி வகுப்பில் பங்கு பெறுவதற்காக தன் காரில் வெளியூர் புறப்படும் ஐஸ்வர்யா, வழியில் நிரஞ்சனை சந்தித்து தன் காரில் அவருக்கு லிப்ட் கொடுக்கிறார்.

இந்த பயணத்தில் காபி குடிக்க, பழம் வாங்க என்று சில இடங்களில் நிறுத்தி பின் பயணத்தை தொடர்கிறார் ஐஸ்வர்யா.

பயிற்சி வகுப்பில் நுழையப் போகும்போது அந்த கட்டடம் திடீரென பெரும் தீ விபத்தில் சிக்குகிறது.

தாமதமாக சென்றிருந்தால் ஐஸ்வர்யாவும் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பார்.

வழிப் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட தாமதங்களே தன் உயிரை காப்பாற்றியிருப்பதாக நம்பும் ஐஸ்வர்யா, திரும்பிச் செல்லும் போது இதற்கு காரணமானவர்களுக்கு நன்றி சொல்ல முடிவெடுக்கிறார்.

திரும்பி வரும் இந்தப் பயணம் பல அனுபவங்களை தந்து வாழ்க்கையைப் பற்றி அவரது பார்வையையே மாற்றி விடுகிறது.

இப்படி ஒரு புதுமையான மற்றும் எளிமையான கதையுடன் களத்தில் இறங்கியதற்காகவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அர்ஜுனை தாராளமாகப் பாராட்டலாம்.

படத்தின் சிறப்பம்சங்களில் முதலிடம் பிடிப்பது ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு தான்.

அனுப் ரூபன்ஸ் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.

காட்சி அமைப்புகள் பலவும் மிகப் பழமையானதாக அமைந்திருப்பது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். நாயகனாக வரும் நிரஞ்சனின் உயரம் சண்டை காட்சிகளில் அவருக்கு வெகுவாக ஒத்துழைக்கிறது. ஏற்ற வேடத்தை நிறைவாக செய்திருக்கும் நிரஞ்சன் சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார் என்று சொல்லலாம்.

தன் திருமணத்துக்கு ஐஸ்வர்யாவின் காதலர் வந்ததாக புகைப்படத்தை அவரிடம் காட்டும் தோழிக்கு காதலனை வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நெருங்கிய தோழி ஐஸ்வர்யாவின் அப்பா சத்யராஜைக்கூடவா தெரியாது?இருவரும்தானே அந்தப் படத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் மெனக்கெட்டிருந்தால் நல்லதொரு படமாகவே அமைந்திருக்க வேண்டிய சீதா பயணத்தை சாதாரண படமாக இயக்குனர் அர்ஜுன் கொடுத்துவிட்டார்.