சீதா பயணம் _ விமர்சனம்
சீதா பயணம்_ விமர்சனம்
ஆக்ஷன் அவதாரத்தில் பல படங்களில் அசத்திய ஆக்சன் கிங் அர்ஜுன் அடக்கி வாசித்து கொடுத்திருக்கும் பீல் குட் மூவி சீதாப்பயணம்.
மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும் நிரஞ்சனை நாயகனாகவும் வைத்து தயாரித்து இயக்கியிருக்கும் அர்ஜுன், படத்தின் திரைக்கதையும் அமைத்திருக்கிறார்.
சிறுவயதிலேயே அம்மாவை இழந்து அப்பா சத்யராஜ் வளர்க்கப்படும் ஐஸ்வர்யா அப்பாவை அம்மா என்று அழைத்துப் பழகி இருக்கிறார்.
புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஒருவரின் பயிற்சி வகுப்பில் பங்கு பெறுவதற்காக தன் காரில் வெளியூர் புறப்படும் ஐஸ்வர்யா, வழியில் நிரஞ்சனை சந்தித்து தன் காரில் அவருக்கு லிப்ட் கொடுக்கிறார்.
இந்த பயணத்தில் காபி குடிக்க, பழம் வாங்க என்று சில இடங்களில் நிறுத்தி பின் பயணத்தை தொடர்கிறார் ஐஸ்வர்யா.
பயிற்சி வகுப்பில் நுழையப் போகும்போது அந்த கட்டடம் திடீரென பெரும் தீ விபத்தில் சிக்குகிறது.
தாமதமாக சென்றிருந்த...
