ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் ‘மித்ரன்’

0

 242 total views,  1 views today

மிக உற்சாகமான எனர்ஜி மற்றும் மரபணு ரீதியாக வலிமையான பண்புகளை கொண்ட சண்முக பாண்டியன், குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியிருக்கிறார். கிராமப்புற பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மித்ரன்’ படத்திற்காக தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு ‘சல சல’ என்ற துள்ளலான ஒரு பாடலை படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. 

இது குறித்து படத்தின் இயக்குனர் ஜி.பூபாலன் கூறும்போது, “ஆம், பாடலின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். ஏனெனில் அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் மொத்த படப்பிடிப்பு தளமும் மிகவும் எனர்ஜியுடன் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

பொதுவாக, போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்ட பின்னணியையும் கொண்டிருக்கும். துள்ளலான கொண்டாட்ட பாடல் எப்படி வைக்க முடியும் என்ற கேள்விக்கு, இயக்குனர் ஜி பூபாலன் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே, இது ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிடுகிறோம். படம் ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனை பற்றியது, அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்துக்கு ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். எனவே நாங்கள் காதல், ஆக்‌ஷன், டிராமா, நகைச்சுவை மற்றும் குறிப்பாக தாய் – மகன் உணர்வுகளுடன் படத்தை ஒன்றிணைத்துள்ளோம். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்னணியில் உள்ள பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சல சல பாடலை பற்றி அவர் கூறும்போது, “அருண் ராஜ் சல சல பாடலில் சாதாரண பதிப்பை எனக்கு வாசித்து காட்டியபோது, அது நிச்சயமாக இறுதி வடிவம் பெறும்போது பாராட்டத்தக்க ஒன்றாக மாறும் என்று நான் உணர்ந்தேன். பின்னர், சதீஷ் தனது நடன அசைவுகள் மூலம் தனது மாயாஜாலத்தை சேர்த்தார். இசை தாளங்களுக்கு ஏற்ப முழுமையான அசைவுகளை பாடல் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு முரளி கிரிஷ் இந்த பாடலை தனது அழகான காட்சிகள் மூலம் சுவை கூட்டியிருக்கிறார். இந்த பாடலை பார்வையாளர்கள் எவ்வாறு ரசிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, சண்முக பாண்டியன் தனது நடனம் மற்றும் வெளிப்படுத்துதல் மூலம் தன்னை காட்டிக் கொண்ட விதம் இன்னொரு அழகு” என்றார்.

வம்சி கிருஷ்ணா வில்லனாக நடிக்க, அழகம் பெருமாள், சாய் தீனா மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களைத் தவிர, ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி கேபிஒய் புகழ் பப்பு மற்றும் யூடியூப் ‘ஹேண்ட்பேக்’ ஷோ புகழ் ஆஷிக் ஆகியோரும் இந்த படத்தில் ஒரு பகுதியாக உள்ளனர். நாயகனுடன் படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முனிஷ்காந்த் நடிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நாயகனின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தாய் – மகன் பிணைப்பு இந்த படத்தின் மிகச்சிறந்த ஒரு சிறப்பம்சமாக இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார். 

இந்த் படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் உறுதி செய்யப்படும்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படங்களில் இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.பூபாலன் எழுதி, இயக்குகிறார்.

 
Share.

Comments are closed.

CLOSE
CLOSE