SPIDER -MAN: FAR FROM HOME

0

Loading

SPIDER -MAN: FAR FROM HOME

ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

வெளியீடு -ஜூலை 5th 2019

உருவாக்கம் -Sony Pictures நிறுவனம்

2017 -இல் வெளிவந்த Spider Man: Homecoming நினைவிருக்கலாம்। Spider -Man  பட வரலாற்றிலேயே இரண்டாவது பெரிய வெற்றி படமாக இப்படம் நிரூபித்தது! வசூலை பொறுத்தமட்டில் அவ்வருட திரைப்பட வசூலில் 6 வது இடத்தை இப்படம் தட்டி சென்றது!

Tom Holland, Spider -Man ஆக தோன்றி நடித்த முதல் படமும் அதுவே! மணவான Peter Parker (Tom Holland ), Vulture என்கிற சிறகுகள் கொண்ட ஒரு வில்லனுடன் (Michael Keaton ) போராடுவதுதான் அதன் கதையம்சம் ! அப்படத்தின் கதை New York நகரை சுற்றி பின்னப்பட்டிருக்கும்।

அதன் இரண்டாம் பாகமான இப்படத்தின் திரைக்கதை அமெரிக்கா விலிருந்து வெளிவந்து உலகம் முழுவதிலும் Spider -Man னுடைய மேதாவிலாசம் பரவும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது! London , Italy , Prague , Berlin , Netherlands , Mexico , Alps  ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது!

முந்தய Spider -Man  படங்களில் இல்லாத அளவிற்கு இப்படத்தில் Spider -Man  கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது! அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது!

மாணவனான பீட்டர் பார்க்கர் Europe சுற்றுப்பயணம் மேற்கொள்கிறான்! உலகை சுற்றி பார்க்க கிளம்பிய அவனுக்கு , உலகை காக்க வேண்டிய ஒரு மகத்தான பொறுப்பும் வந்து சேருகிறது!

பழுத்த அனுபவசாலியான Nick Fury (Samuel L Jackson ) என்கிற ஒற்றன், peter  இடம் முக்கிய பொறுப்பு ஒன்றை ஒப்படைக்கிறான்!

மனித குலத்திற்கு பெரிய ஆபத்து ஒன்றை வழங்க துடிக்கும் சில சக்திகளாக்கி எதிர்த்து போராட வேண்டிய ஒரு கடமை பீட்டர் ஐ அழைக்கிறது !

Mysterio (Jake Gyllenhaal ) என்கிற ஒருவரது அறிமுகமும் பீட்டருக்கு கிடைக்கிறது .

Spider -Man  ஆக உருமாறும் பீட்டர், தனக்கு இடைப்பட்ட பணியை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்ததா என்பதுதான் படத்தின் சாரம்।

Zendaya  பீட்டர் இன் காதலியாக வருகிறாள்।

 2017 -இல் வெளிவந்த Spider -Man: Homecoming படத்தை இயக்கிய ஜான் வாட்ஸ் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது।

Michael Giocchino இசையமைக்க , Matthew  J Lloyd  ஒளிப்பதிவு செய்துள்ளார்।

3 D மற்றும் IMAX  யிலும் இப்படம் வெளியாகிறது।

 

Share.

Comments are closed.