ஏழு அதிரடி சண்டைக் காட்சிகளுடன் “வெங்கட் புதியவன்” திரைப்படம்!

0

 8 total views,  1 views today

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் இரண்டாவது படம் “வெங்கட் புதியவன்”

வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியாக கதாநாயகன் வெங்கட் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு அறிமுகமாகிறார்!

இயக்குனர் ஸ்டண்ட் ஜெயந்த் பிரபல சண்டைப் பயிற்சியாளர் என்பதால், இந்தப் படத்தில் மிகப் பிரமாண்டமான முறையில், தத்ரூபமாக சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். இயக்குனரின் முந்தைய படமான ‘முந்தல்’ கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோவிலில் எடுக்கப்பட்டது.

கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை இந்தப் படம் ஏழு சண்டைக் காட்சிகளின் மூலம், தோலுரித்து காட்டுகிறது.

சண்டைப் பயிற்சி, எழுத்து, இயக்கம் ஸ்டண்ட் ஜெயந்த். ஒளிப்பதிவு பீட்டர், இசை விசால் தியாகராஜன், நடனம் சதீஷ், சூப்பர் பாபு, பாடல்கள் பருதிமான், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு வெங்கடேஷ்.

PRO_கோவிந்தராஜ்

Share.

Comments are closed.