Friday, October 30

Tag: Accused review

அக்யூஸ்ட்  _ விமர்சனம்

அக்யூஸ்ட் _ விமர்சனம்

Reviews
அக்யூஸ்ட் _ விமர்சனம் பலம் மிக்க அரசியல்வாதி ஒருவரை வெட்டிக் கொன்ற அக்யூஸ்ட் உதயாவை அஜ்மல் மற்றும் சில போலீஸ்காரர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். வழியில் ஒரு கும்பல் உதயாவை போட்டுத் தள்ள துடிக்கிறது. அவர்களிடமிருந்து அஜ்மல் உதயா காப்பாற்றுகிறார். உதயாவை சிலர் கொல்லத் துடிப்பது ஏன்? அவர்களிடமிருந்து உதயா தப்பித்தாரா என்பதுதான் அக்யூஸ்ட் படத்தின் கதை. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை உதயாவின் ஆதிக்கம் தான். கனமான பாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்து கவனம் இருக்கிறார் உதயா. முதல் பாதியில் உதயாவின் காதலியாகவும் இரண்டாம் பாதியில், உதயாவால் கை வெட்டப்பட்ட நபரின் மனைவியாகி, காதலனுக்கும் கணவனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் வேடத்தில் கதாநாயகி ஜான்விகா திறம்பட நடித்திருக்கிறார். லாட்ஜ் ஓனராக சில காட்சிகளே வந்தாலும் யோகி பாபு தன் முத்திரையை பதிக்க தவறவில்லை. ...