Thursday, September 17

அக்யூஸ்ட் _ விமர்சனம்

Loading

அக்யூஸ்ட் _ விமர்சனம்

பலம் மிக்க அரசியல்வாதி ஒருவரை வெட்டிக் கொன்ற அக்யூஸ்ட் உதயாவை அஜ்மல் மற்றும் சில போலீஸ்காரர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

வழியில் ஒரு கும்பல் உதயாவை போட்டுத் தள்ள துடிக்கிறது. அவர்களிடமிருந்து அஜ்மல் உதயா காப்பாற்றுகிறார்.

உதயாவை சிலர் கொல்லத் துடிப்பது ஏன்? அவர்களிடமிருந்து உதயா தப்பித்தாரா என்பதுதான் அக்யூஸ்ட் படத்தின் கதை.

முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை உதயாவின் ஆதிக்கம் தான்.
கனமான பாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்து கவனம் இருக்கிறார் உதயா.

முதல் பாதியில் உதயாவின் காதலியாகவும் இரண்டாம் பாதியில், உதயாவால் கை வெட்டப்பட்ட நபரின் மனைவியாகி, காதலனுக்கும் கணவனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் வேடத்தில் கதாநாயகி ஜான்விகா திறம்பட நடித்திருக்கிறார்.

லாட்ஜ் ஓனராக சில காட்சிகளே வந்தாலும் யோகி பாபு தன் முத்திரையை பதிக்க தவறவில்லை.

சீரியஸாக செல்லும் கதையின் இந்தப் பகுதி மட்டும் கதையோட்டத்துடனேயே அமைந்து ரிலீஃப் தருகிறது.

முதல் பாதி திரைப்படம் செம திரில்லிங் ஆகவும், விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது.

ஆனால் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் சற்றே சலிப்பை ஏற்படுத்துகின்றன.

கதை, திரைக்கதை, எழுதி படத்தையும் இயக்கி இருப்பவர் பிரபு ஸ்ரீநிவாஸ்.

சென்னை டு சேலம் டிராவல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஐ மருதநாயகம் அருமையாக படமாக்கி இருக்கிறார்.

குறிப்பாக ஆக்சன் காட்சிகளும் வாகனங்கள் தலை குப்புற கவிழும் காட்சிகளையும் அருமையான கேமரா கோணங்களில் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

நரேன் பாலகுமாரன் பின்னணி இசையும் பாடல்களும் பாஸ் மார்க் பெறுகின்றன.

கச்சிதமாக கத்தரி போட்டு படத்தொகுப்பு செய்திருப்பவர் கே எல் பிரவீன்.

அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் கை கோர்த்தால், எப்படி சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ரசிக்கத் தகுந்த படமாக வழங்கியிருக்கும் படக்குழுவை தாராளமாக பாராட்டலாம்.