Thursday, September 3

Tag: “Actor Arun Vijay

‘மிஷன் சாப்டர்1’ சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்”_இயக்குநர் விஜய்!

‘மிஷன் சாப்டர்1’ சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்”_இயக்குநர் விஜய்!

News
'மிஷன்- சாப்டர்1' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது, “இயக்குநர் விஜய் என்னுடைய வீட்டில் ஒருவர் போலதான். அவருடன் நான் பத்து படங்கள் வேலை செய்துவிட்டேன். என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து பல ஹிட் பாடல்கள் விஜயின் படங்களில்தான் அமைந்தது. எங்கள் காம்பினேஷனில் முத்துகுமார் சாரை மிஸ் செய்கிறோம். அருண் விஜய் சாருடன் ‘யானை’, ‘மிஷன் சாப்டர் 1’, அடுத்து பாலா சார் படம் எனத் தொடர்ந்து மூன்று படங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படம் ...
அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் !

அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் !

News
அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் ! தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சி...
யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்த ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ டீசர்!

யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்த ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ டீசர்!

News
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். வெளியான 24 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட மில்லியன் பார்வைகளை நெருங்கி யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லயே' பட டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வக...
அருண் விஜய்- ஏமி ஜாக்சன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’!

அருண் விஜய்- ஏமி ஜாக்சன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’!

News
  ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லயே' படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்ய...

“ஓ மை டாக்” திரைப்படத்தில் 100 நாய்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அருண் விஜய் பகிர்வது…?

News
சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது. நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் சரவ் சண்முகம் கூறும்போது.., இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம் என்றனர். 100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய் பகிர்ந்துகொண்டதாவது.., இவ்வளவு நாய்களுடன் ஒரே...
அருண் விஜயின் அட்டகாசமான நடிப்பில் உருவாகும் சினம்!

அருண் விஜயின் அட்டகாசமான நடிப்பில் உருவாகும் சினம்!

News
உழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்கபடாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். சமீபமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனங்களை அள்ளியிருக்கும் அருண் விஜய், 2020 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “மாஃபியா” படம் 2020 பிப்ரவரி 21 ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இன்னொரு பக்கம் நடிகர்  விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கும் “அக்னி சிறகுகள்” படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் காவல் அதிகாரியாக அவர் நடிக்கும் “சினம்” படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது... இந்த 2020 ஆம் வருடம் நிறைய நேர்மறை அம்சங்களை வாழ்வில் கொண்டுவந்துள்ளது. ...
குத்துச்சண்டை வீரர்களுடன்  அருண் விஜய் சந்திப்பு!

குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜய் சந்திப்பு!

News
அருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் வலுவும் கொண்ட இவர், தனக்குள் பெருக்கெடுக்கும் விளையாட்டு ஆர்வத்தைத் தன் மட்டோடு அடக்கிக்கொள்ளவில்லை. தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20  குத்துச்சண்டை வீர்களுக்கும் (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, மற்றும் வெள்ளி பெற்றவர்கள் 9) பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகத் தமது ஆதரவுக் கரத்தையும் நீட்டியிருக்கிறார். ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதன...