Sunday, September 20

Tag: Actor Karthi

கார்த்தி பிறந்தநாள் கொண்டாடம் ஆரம்பம்!

கார்த்தி பிறந்தநாள் கொண்டாடம் ஆரம்பம்!

News
கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. முதலாவதாக மே 12 ஆம் தேதி  சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப...
14 வருடங்களுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘பையா’!

14 வருடங்களுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘பையா’!

News
ஏப்-11ல் டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் “பையா’! 14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப நாட்களாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் அதற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. Nலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முன்னோட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் கமலா திரையரங்கில் ஒரு காட்சி திரையிடப்பட்டது. படம் வெளியானபோது ஏற்பட்ட அதே...
25 சமூக செயற்பாட்டாளர்களை கெளரவப்படுத்தி தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கிய நடிகர் காரத்தி!

25 சமூக செயற்பாட்டாளர்களை கெளரவப்படுத்தி தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கிய நடிகர் காரத்தி!

News
இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார்! "இங்கு அன்பு சார்ந்த இத்தனை பேரை ஒருங்கிணைத்ததே மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. 25வது படத்தை முடித்து விட்டோம். இந்த தருணத்தில் மக்களுக்கு நன்றி சொல்ல ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாய் அளவில் அன்னதானம் வழங்க முடிவு செய்தோம். நான் பணமாக தான் கொடுத்தேன். ஆனால் என்னுடைய தம்பிகள் ஒவ்வொரு பகுதியாக சென்று தினமும் ஆயிரம் பேருக்கு அவர்கள் கையால் சாப்பாடு போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன். ஒரு விஷயம் செய்தா...
“கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது ஒரு சவாலாக இருந்தது”_ ஜப்பான் படம் குறித்து மனம் திறந்த கார்த்தி!

“கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது ஒரு சவாலாக இருந்தது”_ ஜப்பான் படம் குறித்து மனம் திறந்த கார்த்தி!

News
“முழுப்படத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது சவாலாக இருந்தது” ; ஜப்பான் படம் குறித்து மனம் திறந்த கார்த்தி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, கடந்த 20 வருட திரையுலக பயணத்தில் பத்திரிகையாளர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “ஒவ்வொரு முறை படம் பார்த்துவிட்டு நீங்கள் என்னிடம் கூறிய கருத்துக்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. குறிப்பாக மெட்ராஸ் திரைப்படம் வெளியானபோது, இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று நீங்கள் கூறினீ...
துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி!

துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி!

News
துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி: தொழிலாளர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டம் நடிகர் கார்த்தி தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற தனது ‘ஜப்பான்’ திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார். ஜப்பான் படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும் அது எப்படி சவால் நிறைந்ததாக இருந்தது என்கிற அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதுடன் ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக தனது கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக புர்ஜ் கலிபாவை பார்வையிட்டார் கார்த்தி. தனது சமூக நல செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற கார்த்தியிடம், ...

“என் ஒவ்வொரு படமுமே ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும்”_ கார்த்தி

News
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை. இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம். பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் எனன் ஸ்பெஷல்? நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான பய...
25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்!

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்!

News
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு - இயக்குநர் ராஜுமுருகன் தொடங்கி வைத்த தினசரி உணவு வழங்கும் திட்டம்! கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் 'ஜப்பான்' திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை 'ஜப்பான்' படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவும், அப்படத்தின் இயக்குநரான ராஜுமுருகனும் இணைந்து தொடங்கி வைத்தனர். இதன்போது கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும் உடனிருந்தனர். நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் 'ஜப்பான்'. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விரு...
ஊருசனம்” இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி!

ஊருசனம்” இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி!

News
இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது ‘ஊருசனம்’ என்கிற தனி இசை பாடல். இந்த பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து இந்த இசை ஆல்பத்தை தயாரித்தும் உள்ளார் அட்ராம் (ATRam). முத்துச்சிற்பி மற்றும் ரேப்பர் ஃபனோஹா இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலை கண்கவரும் வகையில் இயக்கியுள்ளார் முகின் ஜெயராஜ். இந்தப் பாடலுக்கான நடனத்தை கோகுல் வடிவமைத்துள்ளார். ட்ரெண்ட் மியூசிக்கில் வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த பாடலை பார்த்துவிட்டு நடிக...
மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று நடித்து வரும் நடிகர் கார்த்தி !

மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று நடித்து வரும் நடிகர் கார்த்தி !

News
திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல விருதுகளை வென்ற திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், கார்த்தியின் இந்த 25 வது படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். K.E.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் (சூது கவ்வும், காதலும் கடந்து போகும்) புகழ் இயக்குநர் நலன் குமாரசாமியின் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்துகொள்ளவிருக்கிறார். இடையில், ஜப்பான் படத்தின் ...
வேளாண் வர்த்தக திருவிழா _ பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

வேளாண் வர்த்தக திருவிழா _ பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

News
வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த தகவலை மிகவும் அக்கறையுடன் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர். அனைவரும்...