கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!
தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு தொடங்கி வைத்த கவினின் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு!
தமிழ் திரையுலகில் வெற்றி பெற்று நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'தண்டட்டி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள எம். கதிரவன் மதி கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் ...









