Tuesday, February 11

Tag: actor prasanth

அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா!

அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா!

News
'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா! ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ ...
வெயிட்டான கதை ‘அந்தகன்’- பிரஷாந்த் பெருமிதம்!

வெயிட்டான கதை ‘அந்தகன்’- பிரஷாந்த் பெருமிதம்!

News
வெயிட்டான கதை - பிரஷாந்த் பெருமிதம்! நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக . ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல . இவர் மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க முழுக்க க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருப்பவர் இவர் மட்டுமே . பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் என்ற கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்‌ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில் நடித்து வெற்றிப் படிக்கட்டுகளில...
“அசத்திய ‘அந்தாதுன்’னும் அசத்த வரும் ‘அந்தகனு’ம்”- இயக்குநர் தியாகராஜன்!

“அசத்திய ‘அந்தாதுன்’னும் அசத்த வரும் ‘அந்தகனு’ம்”- இயக்குநர் தியாகராஜன்!

News
"அசத்திய 'அந்தாதுன்'னும் அசத்த வரும் 'அந்தகனு'ம்"- இயக்குநர் தியாகராஜன் ! ஹிந்தியில் ‘அந்தாதுன்' என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்' என்ற பெயரில் ரீ மேட் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவரிடம் ‘அந்தாதுனு'க்கு இணையா எப்படி ஒரு தமிழ்வார்த்தையை பிடித்தீர்கள்?'என்று கேட்ட போது ''அந்தாதுன் என்றால் ஹிந்தியில, பார்வையற்றவன்னு அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை சில நாட்கள் செலவு செய்து தேடினோம். நிறைய ஆய்வு பண்ணினோம். அதில் சிக்கிய வார்த்தைதான் ‘அந்தகன்’.' என்றார் மேலும் "ஹிந்தியில, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் அந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைத்திருப்பார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் ந...
பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு!

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு!

News
பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு! 'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்...
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரசாந்த் வேண்டுகோள்!

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரசாந்த் வேண்டுகோள்!

News
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவு செய்து உதவி செய்ய முன் வாருங்கள் - நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்! பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் பிரசாந்த்...... அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம் என்றும் அதேசமயம் மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படம் என்றும் கூறினார். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை ரீமெட் படம் 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை ...
“‘அந்தகன்’ ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்” தியாகராஜன்!

“‘அந்தகன்’ ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்” தியாகராஜன்!

News
பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்தில் இருந்து 'அந்தகன் ஆந்தம்' ப்ரமோ பாடல் வெளியீடு! 'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, 'அந்தகன் ஆந்தம்' எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் 'நடன புயல்' பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் - நடிகர் கே .எஸ். ரவிக்குமார், நடிகை ...
பிரஷாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

பிரஷாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

News
இளம் வயதிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமை நடிகர் பிரஷாந்துக்கு மட்டுமே உள்ளது. காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஜானர்களிலும் தனி முத்திரை முத்திரை பதிக்கும் நடிகர் பிரஷாந்த் கோலிவுட்டில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது விஜயின் ‘கோட்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பல புதிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரஷாந்த், நேற்று தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் கலந்துக்கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஷாந்த், “நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கு...
பிரசாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் 5 லட்சம் ரூபாய் நன்கொடை!

பிரசாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் 5 லட்சம் ரூபாய் நன்கொடை!

News
  நடிகர் பிரஷாந்த் இன்று பத்திரிகையாளர் மத்தியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் . ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில்  பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி ,இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர். இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது " இது நமது குடும்ப விழா. வந்திருக்கும் அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்ற...
பிரசாந்த் நடிக்க, தமிழில் தயாராகிறது அந்தாதுன் ஹிந்திப்படம்!

பிரசாந்த் நடிக்க, தமிழில் தயாராகிறது அந்தாதுன் ஹிந்திப்படம்!

News
இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். ஏற்கெனவே, தியாகராஜன் ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தியாகராஜன் பேசுகையில், 'அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இ...