43 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்களுடன் நடிகர் ரஹ்மான்!
43 வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்களுடன் நடிகர் ரஹ்மான்!
* ஊட்டி ‘ரெக்ஸ்’ பள்ளியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா!!
250 படங்களிக்கு மேல் நாயகனாக நடித்து வருபவர் எவர் கிரீன் நடிகர் ரஹ்மான். இவர் ஊட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளி ‘கிறைஸ்டஸ் ரெக்ஸ்’ சீனியர் மேல் நிலை பள்ளியில் ( Christus Rex Higher Secondary School - Ooty ) 7ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்தார். 1983 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது தான், மலையாள பிரபல டைரக்டர் பத்மராஜன் இயக்கத்தில் மம்மூட்டி, சுஹாசினி நடித்த " கூடேவிடே " படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா, நாளை வெள்ளி கிழமை Nov: 7 ம் தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக ரஹ்மான் பங்கேற்கிறார். 43 வருடங்கள் கழித்து.. இதற்காக, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து கொண்டு இன்று மாலை 4 மண...





