பரப்பரப்பான அரசியல் சூழலில் பட்டையைக் கிளப்ப மீண்டும் வருகிறது ‘அமைதிப்படை’!
பரப்பரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்-மணிவண்ணனின் 'அமைதிப்படை'
*ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் 'அமைதிப்படை' படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்*
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றி கண்ட ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன், புரட்சி தமிழன் சத்யராஜ்-மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் சூப்பர் ஹிட் 'அமைதிப்படை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார்.
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இக்கால அரசியலுக்கும் பொருந்தும...









