யூ/ஏ சான்றிதழ் பெற்ற வைபவ்வின் ‘மாறுவேஷம்’
நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'மாறுவேஷம்'.
வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழுதி ...



