ரெடின்கிங்ஸ்லி யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’!
பிரம்மாண்டமாக நடந்த 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' படத்தின் துவக்க விழா!
Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக சேலம் சரவணன் செயல்படுகிறார்.
பட விழா...





