உறவுகளின் உன்னதத்தை விளக்கும் உயர்வான படம் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்:
ரத்தம் தெறிக்கும் வெட்டு குத்து கதைகள், துப்பாக்கி குண்டுகள் தெறிக்கும் பழிவாங்கல் படலங்கள் என்றெல்லாம் பார்த்து சலித்த ரசிகர்களுக்கு, உறவுகளின் உன்னதத்தை விளக்கும் உயர்வான படமாக மலர்கிறது சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.
கடந்த ஆண்டு 'லக்கி பாஸ்கர்' படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்ற வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது.
சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் - இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது.
நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் - ஆகியவற்றை சூர்யா மிக சி...









