Saturday, September 19

Tag: Angammal review

அங்கம்மாள்_ விமர்சனம்

அங்கம்மாள்_ விமர்சனம்

Reviews
அம்மா அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த கீதா கைலாசம் பிரதான வேடத்தில், டைட்டில் ரோலில் நடித்திருக்கும் படம் அங்கம்மாள். கணவரை இழந்து வாழும் கீதாவின் மகன் பரணி ஒரு விவசாயி. மற்றொரு மகனான சரண் ஒரு மருத்துவர். முரட்டு பிடிவாத குணம் கொண்ட அங்கம்மாள் தனது இரண்டு மகன்கள் மற்றும் பரணியின் மனைவி தென்றல் ரகு நாதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரது பேச்சுக்கு யாரும் எதிர்ப் பேச்சை பேச முடியாது. பணக்கார பெண்ணான முல்லையரசியை சரண் காதலிக்கிறார். ஜாக்கெட் அணியும் பழக்கம் இல்லாத தன் தாயார் கீதா கைலாசத்தை, திருமணம் பேச தன் வீட்டுக்கு வரும் காதலி முல்லையரசியின் உறவினர்கள் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என நினைக்கிறார் சரண். எனவே நேரடியாக அம்மாவிடம் சொல்ல பயப்பட்டு, தன் அண்ணி தென்றல் ரகுநாதன் மூலம் சொல்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை பெரிதாக வெடிக்...