அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘வலை’!
ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ’உருவாகும் ‘வலை திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்!
அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகராக அதர்வா முரளி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் பாராட்டப்பட்ட ‘DNA’ திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அதர்வாவின் திறமையான நடிப்பு பாராட்டப்பட்டது. இப்போது, முதல் முறையாக ‘வலை’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார் அதர்வா முரளி. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ’நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்...





