பாலன் – விமர்சனம்
பாலன்: தி பாய் - ஒரு மிரட்டலான தாய்-மகன் ரன்!
மலையாளப் படங்கள்னாலே ஒரு தனி கெத்துதான்! சின்ன விஷயத்தை வெச்சுட்டு படம் முழுக்க நம்மை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துடுறாங்க. அந்த வரிசையில் 'பாலன்: தி பாய்' வேற லெவல் அனுபவம்.
கதையின் சுருக்கம்
ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுற பர்சானா, பழைய அடையாளங்களை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, தன் பையனோட புது ஊர் தேடிப் போறாங்க. நோக்கம் ஒன்னுதான் - பையனை பத்திரமா வளர்க்கணும்.
ஆனா, அவங்க போற இடமெல்லாம் விடாம துரத்துது அந்த மர்மம். ஒரு பாட்டி வீட்ல வேலைக்குச் சேர்ந்தாலும், அங்கேயும் நிம்மதி இல்ல. அம்மா-மகன் போராட்டத்தோட முடிவு என்ன? இதுதான் மிரட்டலான 'பாலன்'.
நடிப்பு அனல்
பர்சானாவா வர்ற அம்மாவின் நடிப்புல ஒரு தீர்க்கமான உறுதி தெரியுது. பையனை காக்க அவங்க போடுற ஒவ்வொரு வேஷமும், அந்த பயமும், பிடிவாதமும் அற்புதம்.
பையனா வர்ற அதிசேஷன், அந்தச் சின்ன ...
