![]()
பாலன்: தி பாய் – ஒரு மிரட்டலான தாய்-மகன் ரன்!
மலையாளப் படங்கள்னாலே ஒரு தனி கெத்துதான்! சின்ன விஷயத்தை வெச்சுட்டு படம் முழுக்க நம்மை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துடுறாங்க. அந்த வரிசையில் ‘பாலன்: தி பாய்’ வேற லெவல் அனுபவம்.
கதையின் சுருக்கம்
ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுற பர்சானா, பழைய அடையாளங்களை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, தன் பையனோட புது ஊர் தேடிப் போறாங்க. நோக்கம் ஒன்னுதான் – பையனை பத்திரமா வளர்க்கணும்.
ஆனா, அவங்க போற இடமெல்லாம் விடாம துரத்துது அந்த மர்மம். ஒரு பாட்டி வீட்ல வேலைக்குச் சேர்ந்தாலும், அங்கேயும் நிம்மதி இல்ல. அம்மா-மகன் போராட்டத்தோட முடிவு என்ன? இதுதான் மிரட்டலான ‘பாலன்’.
நடிப்பு அனல்
பர்சானாவா வர்ற அம்மாவின் நடிப்புல ஒரு தீர்க்கமான உறுதி தெரியுது. பையனை காக்க அவங்க போடுற ஒவ்வொரு வேஷமும், அந்த பயமும், பிடிவாதமும் அற்புதம்.
பையனா வர்ற அதிசேஷன், அந்தச் சின்ன வயசுலயே ஸ்கோர் பண்ணிட்டான்!
மர்மத்தைச் சமாளிக்கிற அந்தச் சுட்டித்தனம் செம. வளந்த பையனா வர்ற சினானும் எமோஷனல் பயணத்துல கலக்கிட்டாரு. போலீஸ் கெட்டப்ல ஜீன் பால் லால் வந்து நின்னாலே ஸ்கிரீன் அதிருது!
தொழில்நுட்பம்
கேமராமேன் ஷைஜு காலித் காட்டுப் பகுதியையும், வீடுகளையும் நம் கண் முன்னாடி நிஜமா நிறுத்திட்டார்.
பாட்டு, இசைன்னு அதகளம் பண்ணி, காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் சுஷின் ஷ்யாமுக்கு ஒரு பெரிய சபாஷ்!
இயக்கம்
‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம்தான் இந்தப் படத்தையும் இயக்கி இருக்கிறார் .ஆனா இங்க வேற ரூட்!
முதல் பாதி ஃபுல் த்ரில்லர்னா, இரண்டாம் பாதி முழுக்க முழுக்க எமோஷனல் ஆட்டம். சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இல்ல!
பிளஸ் & மைனஸ்
பிளஸ்: குட்டிப் பையனின் நடிப்பு, விறுவிறுப்பான ஃபர்ஸ்ட் ஹாஃப், கிளைமாக்ஸ்ல அடிக்குற அந்த ட்விஸ்ட்!
மைனஸ்: செகண்ட் ஹாஃப்ல கதை கொஞ்சம் பொறுமையை சோதிக்கும், சில கேரக்டர்களை இன்னும் நல்லா செதுக்கியிருக்கலாம்.
கடைசி வார்த்தை
‘பாலன்’ வெறும் த்ரில்லர் படம் மட்டும் இல்ல; ஒரு அம்மாவோட ஒற்றை ஆள் போராட்டம். படம் முடிஞ்ச பிறகு மனசுல ஒரு கனமான அழுத்தத்தை விட்டுட்டுப் போகுது.
மிஸ் பண்ணாம பாருங்க!
மதப்பெண் 4/5


