‘பயமறியா பிரம்மை’ _ விமர்சனம்
‘பயமறியா பிரம்மை’ _ விமர்சனம்
கொலையை செய்யும் கொலைகாரர்கள் தாங்கள் செய்த கொலையை நியாயப்படுத்துவதை படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் தான் செய்த கொலைகளை கலை என்று சொல்லும் ஒரு கொலைகாரனைப் பற்றிய படம்தான் ‘பயமறியா பிரம்மை'
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன், கொடூர சிறைக்கைதி ஜெகதீசை சந்திக்கிறார். அவன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்தவன். அவன் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதே எழுத்தாளர் கபிலனின் எண்ணம்.
எழுத்தாளர் கபிலன் தன்னுடையஎழுத்துகளைப் படைப்புகள் என சொல்ல.. கொலைகாரன் ஜெகதீசும், தன்னுடைய கொலைகளும் படைப்புகள் என்கிறான்.
மேலும், தான் செய்த ஒவ்வொரு கொலையையும் விளக்கிச் சொல்கிறான். அதை ஜெகதீஷின் தோற்றத்தை வைத்துச் சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்து சொல்கிறார்கள்.
எழுத்தாளராக வரும் வினோத் சாகர், கைதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஜெடி, ...
