‘குறள் இசையோன்’ பரத்வாஜ்!
'குறள் இசையோன்' பரத்வாஜ்!
இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்', டொராண்டோ தமிழ் சங்கம் "குறள் இசையோன்" பட்டம் வழங்கியது.
காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து, இசையமைத்த அத்தனை பாடல்களையும் 'மெகா ஹிட்' செய்த இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் 1330 திருக்குறளை, 1330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில்10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்.
கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்' பரத்வாஜ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்த அவருக்கு பாராட்டு விழா நடத்தி, 'குறள் இசையோன்' பட்டத்தையும் வழங்கியது. கனடா அரசும் அந்த விழாவில் பரத்வாஜ் அவர்களின் திருக்குறள் தமிழ் சேவையை பாராட்டி சர்டிபிகே...

