Friday, October 23

Tag: Bun butter jam review

பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

Reviews
பன் பட்டர் ஜாம் _ விமர்சனம் பிக் பாஸ் புகழ் ராஜு கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். கதாநாயகிகளாக ஆதியா மற்றும் பாவ்யா இருவரும் நடித்திருக்கின்றனர். ஃபிரண்ட், லவ்வர், பெஸ்டி என்றெல்லாம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்பதை வைத்து இந்தப் படம் உருவாக்க பட்டதோ? ராஜுவின் தாயார் சரண்யா பொன்வண்ணனும், ஆதியாவின் அம்மா தேவதர்ஷணியும் இணைந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதாவது தங்கள் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும்போது, யாரையாவது காதலித்து தொலைத்து, கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக தங்கள் பிள்ளைகள் இருவரையும் ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்து, பழக வைத்து அவர்களை காதலிக்கவும் வைத்து, திருமணம் செய்து வைத்து விடலாம் என்பதுதான் அந்த (சிறப்பு)  திட்டம்.  பிள்ளைகளைப் பொறுத்தவரை அது லவ் மேரேஜ் ஆகவும், ...