சாருகேசி _ விமர்சனம்
சாருகேசி: விமர்சனம்
இசையையே தன் உயிராக நினைக்கும் ஒரு ,வித்துவானுக்கு, முதுமையும் மறதி நோயும் (அல்சைமர்) சாட்டையடி கொடுக்கும்போது, அவரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் படும் மன உளைச்சல்தான் இந்தத் திரைப்படத்தின் மையக்கரு.
'சாருகேசி' என்ற அந்த ராகத்தின் பெயரிலேயே கதையின் மொத்த ஜீவனும் அடங்கியிருக்கிறது.
கர்நாடக இசை உலகில் கொடிகட்டிப் பறக்கும் வித்வானாக ஒய்.ஜி.மகேந்திரன். உலகம் முழுக்க அவருக்குப் பாராட்டு மழை பொழிந்தாலும், அன்பான மனைவி கண்ணை இமை காப்பது போல் காத்தாலும் அவரது நெஞ்சில் இரண்டு முட்கள் குத்திக் கொண்டே இருக்கின்றன.
அது, சொந்த மகன் அவர் மீது காட்டும் வெறுப்பும், மாட்டுப் பெண்ணாய் வரும் மருமகள் ஏற்படுத்தும் வலியும்தான். இந்த வலியை அவர் தாங்கிக்கொள்வதும், மனைவி மீது பொழியும் காதலும், நோய் முற்றிய பின் குழந்தையாக மாறும் காட்சிகளும் என மனிதர் நடிப்பில் அள்ளுகிறார்.
அவ...
