Sunday, August 30

Tag: comali

கோமாளி படஇயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!

கோமாளி படஇயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!

News
டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களிடையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஓர் ஆடம்பர ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்திருக்கிறார். இதைப்போலவே முன்னர் எல்.கே.ஜி. படத்தை வெற்றிப்படமாக்கிய  இயக்குநர் பிரபுவுக்கும் கார் ஒன்றை ஐசரி கணேஷ் பரி...
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

News
ரசிகர்களின் தேவையை சரிவர அறிந்து, அதற்கேற்ப இசை அமைத்து புகழின் உச்சியில் குறைந்த காலத்தில் வீற்று இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. அதிலும் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் அவர் அமைக்கும் இசை அவரை இசை உலகின் நாயகனாகவே மாற்றி விடுகிறது. "கோமாளி" படத்தின் பாடல்கள் அவருடைய உற்சாகமூட்டும் இசைக்கென்றே எல்லோராலும் முணுமுணுக்க படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது எனக் கூறும் ஆதி படத்தை பற்றியும் , படத்தில் உள்ள தனது இசையை பற்றியும் கூறுகிறார்.  "கோமாளி" படத்தின் பின்னணி இசை கோர்ப்பு  மிக மிக சவாலாக இருந்தது.  எல்லா உணர்ச்சிகளின் கலவையான படம் என்பதால் , குறிப்பிட்ட ஒரு பாணியை மட்டுமே கடைப்பிடிக்க முடியவில்லை..இயக்குனர் பிரதீப் என்னிடம் கதை சொன்ன வினாடியே இந்த சவால் எனக்கு புலப்பட்டது.90க்களில் பிறந்த எனக்கு அந்தக் காலக் கட்டத்தின் உணர்ச்சிகள் எனக்கு எளிதாகவே புரிந்தது. என...
கோமாளி பட முன்னோட்டம் குறித்து ஜெயம் ரவி விளக்கம்!

கோமாளி பட முன்னோட்டம் குறித்து ஜெயம் ரவி விளக்கம்!

Uncategorized
நான் நடிக்க ஆரம்பித்தபோதிலிருந்தே என்னைப் பற்றிய நேர்மையான, தூய்மையான பிம்பம் இருப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறேன். அதனால்தான் இதுவரை நான் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கவில்லை. என்னுடைய எண்ணங்களும் நிலைப்பாடுகளும் நான் ஏற்றிருக்கும் கற்பனைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டிருக்குமேயன்றி, எல்லைகளைத் தாண்டியவையாக ஒருபோதும் இருந்ததில்லை. எல்லோரிடத்திலும் இனிமையாகவும், புரிதலோடும் பழகும் நண்பனாகவே இருந்துவருகிறேன். எல்லோராலும் விரும்பப்படும் பரஸ்பரத் தோழனாகவே திரையுலகில் வலம்வருகிறேன். நான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். வெளியாவதற்கு முன்னரே இந்தப் படம் ஒரு முழு நீள, மகிழ்ச்சி ததும்பும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பப் படம் என்ற பெயரைத் தட்டிச்சென்றிருக்கி...
முழுநீள பொழுதுபோக்கு படம் கோமாளி!

முழுநீள பொழுதுபோக்கு படம் கோமாளி!

News
ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர் போல இருக்கிறது. முந்தைய படமான "அடங்க மறு" உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்து வரவிருக்கும் கோமாளி படத்தை காமெடி மற்றும் எமோஷன் கலந்த முழுநீள பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.   இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, "ஆம், நாங்கள் நகைச்சுவை அம்சங்களை கொண்ட குடும்பத்துடன் ரசிக்கும் முழுநீள பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெயம் ரவி சார் தனி ஒருவன் மற்றும் அடங்க மறு போன்ற திரைப்படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதையே பார்த்து வந்திருக்கிறோம். இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒ...